india

சண்டிகர் : பாஜக வெற்றி செல்லாது

புதுதில்லி, பிப். 20- சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வெற்றி செல்லாது என்றும், “இந்தியா” கூட்டணி ஆதரவில் கள மிறங்கிய ஆம் ஆத்மியே வெற்றி பெற்றுள்ளதாகவும் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

பஞ்சாப் - ஹரியானா நீதிமன்ற உத்தரவின்படி கடந்த ஜனவரி மாதம்  30 அன்று சண்டிகர் மாநகராட்சி மேயர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 36 இடங்களில், பாஜக சார்பில் போட்டியிட்ட மனோஜ் சோங்கர் 16 வாக்குகளை பெற்றிருந்தார். ஆம் ஆத்மி - காங்கிரஸ் அடங்கிய “இந்தியா” கூட்டணி வேட்பாளர் குல்தீப் குமார் 20 வாக்குகளை பெற்றிருந்தார். இதனால் “இந்தியா” கூட்டணி வெற்றி பெற்று மேயர் பதவியை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் நடத்தும் அதி காரி அனில் மாஷி, ஆம் ஆத்மி  கட்சியின் 8 வாக்குகள் செல்லாதவை என்று கூறி, பாஜக வேட்பாளர் மனோஜ் சோங்கர் வெற்றி பெற்ற தாக சர்ச்சைக்குரிய அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த அறிவிப்பு முறைகேடா னது என்பது உடனடியாக வெளிச் சத்துக்கு வந்தது. தேர்தல் அதிகாரி எதிர்க்கட்சிகளின் வாக்குகளை பேனாவால் திருத்தும் தில்லி முல்லு சம்பவத்தை வீடியோ ஆதாரத்துடன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது ஆம் ஆத்மி. இந்த வழக்கின் 2-ஆம் கட்ட  விசாரணை திங்களன்று நடைபெற்ற நிலை யில், பாஜகவிற்கு ஆதரவாக செயல்பட்ட தேர்தல் அதிகாரி அனில்  மாஷி உச்சநீதிமன்றத்தில் ஆஜரானார்.

குற்றத்தை ஒப்புக்கொண்ட தேர்தல் அதிகாரி
உச்சநீதிமன்ற நீதிபதிகள் அவரை நோக்கி,”நாங்கள் கேட்கும் சில கேள்விகளுக்கு உண்மையாக பதில் அளிக்கவில்லை என்றால், உங்கள் மீது வழக்கு தொடரப்படும். இது ஒரு மிகவும் முக்கியமான மற்றும் தீவிரமான விஷயம். தேர்தல் நடத்தும் அதிகாரியாக இருந்து நீங்கள் செய்தவற்றை வீடி யோவில் பார்த்தோம். வாக்குச் சீட்டு களில் எழுதும் போது கேமராவைப் பார்த்து என்ன செய்து கொண்டி ருந்தீர்கள்? வாக்குச்சீட்டுகளில் பேனாவைக் கொண்டு ஏன் எழு தினீர்கள்?” என்று சரமாரியாக கேள்விகளை தொடுத்தனர். இதை யடுத்து, மேயர் தேர்தலில் 8 வாக்குச் சீட்டுகளில் ‘x’ என குறிப்பிட்டு செல்லாத வாக்குகளாக மாற்றியதை தேர்தல் அதிகாரி ஒப்புக்கொண்ட நிலையில், அவர் மீது சட்ட நட வடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. மேலும் தேர்த லில் பதியப்பட்ட அனைத்து வாக்குச் சீட்டுகளையும் செவ்வாயன்று சமர்ப்பிக்க உச்சநீதிமன்ற நீதிபதி கள் உத்தரவிட்டனர்.

நாடே கவனித்த வழக்கு
தேர்தல் அதிகாரி ஒருவர் நாட்டின் தலைமை நீதிபதியால் குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது முதன்முறை என்பதால் இந்த வழக்கு தேசிய கவனம் பெற்ற நிலையில், செவ்வாயன்று காலை மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு காலையில் விசாரணைக்குப் பிறகு, பதிவாளர் அனைத்து வாக்கு சீட்டுகள் தொடர்பான விவரங்கள், வாக்குச்சீட்டுகள், அதுசார்ந்த முழு மையான வீடியோ பதிவுகள் அனைத் தையும் பிற்பகல் 2 மணிக்குள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

ஆய்வுக்குப் பின்னர் தலைமை நீதிபதி சந்திரசூட்,”இதுபோன்ற விவ காரங்களில் குதிரை பேரம் நடப்பது என்பது உச்சநீதிமன்றத்திற்கு அதி கப்படியான வருத்தத்தை தரக்கூடி யதாக இருக்கிறது. தனது அதிகார வரம்பை மீறி தேர்தல் நடத்தும் அதி காரி தவறு செய்து, பாஜகவுக்கு ஆதரவாக ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளருக்கு பதிவான வாக்குகளை செல்லாததாக தேர்தல் அதிகாரி மாற்றி உள்ளார். எனவே, சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறி வித்தது செல்லாது. சண்டிகர் மேயர் தேர்தலில் 8 வாக்குச் சீட்டுகளை செல் லாது என அறிவிக்க எந்த முகாந்தி ரமும் இல்லை. எனவே தேர்தல் அதி காரி செய்த தில்லுமுல்லு நட வடிக்கைக்காக ஒட்டுமொத்த தேர்த லையே ரத்து செய்ய வேண்டிய அவ சியம் இல்லை. சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் வெற்றி பெற்றார்” என அவர் அறிவித்தார். 

“இந்தியா” அணி வரவேற்பு
உச்சநீதிமன்ற அறிவிப்பால் காங் கிரஸ் வேட்பாளர் துணை மேய ராக வெற்றிபெற்றது உறுதியான நிலையில், சண்டிகர் மாநகராட்சி யை “இந்தியா” கூட்டணி நிர்வகிக்க உள்ளது. பாஜகவின் கோரப்பிடி யில் இருந்து ஜனநாயகம் மீட்கப் பட்டுள்ளது என சண்டிகர் மேயர் தேர்தல் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவுக்கு “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் வரவேற்பு தெரிவித் துள்ளன.