india

img

திருக்குறளைக் கற்றுத் தெளிய வேண்டியது நீங்களா? நாங்களா? - மயிலை பாலு

“கற்றதனால் ஆய பயனென்கொல்                   

                                                                         வாலறிவன்
 நற்றாள் தொழாஅர் எனின்” 

கடவுளைத் தூற்றி, இறை நம்பிக்கை கொண்ட வர்களைப் பழிப்பவர்களுக்கு அவர்கள் கற்ற கல்வியினால் என்ன பயன்? அன்றே வள்ளுவர் சொன்னதை இன்று திமுகவும் திமுகவை நம்பி வாழும் கம்யூனிஸ்டு களும் அவர்கள் சார்ந்த ஊடகங்களும் அறிந்து தெளிய வேண்டும். இது பாஜக தமிழ்நாடு பிரிவின் டுவிட்டர் அறிவுரை.  திமுகவும் கம்யூனிஸ்டுகளும் தெளி வில்லாமல் இருப்பதாக ‘தெளிந்தவர்’ சொல்லி யிருக்கிறார். இது ஓர் அரசியல் விவாதம். யார் தெளிவோடு இருக்கிறார்கள்? யார் குழப்பு கிறார்கள்? யார் குளத்தைக் குழப்பியாவது மீன் பிடிக்கலாம் என்று துடிக்கிறார்கள்?  என்ற புரிதலில் தமிழக மக்கள் தெளிவாக இருக்கி றார்கள்.  அதைத்தான் அவர்கள் 2019 மக்க ளவை தேர்தல் முடிவுகளில் எதிரொலித்தார்கள். 

இது தெளிவானதால்தான் மீண்டும்  சங்கிகள் குழப்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.  ஏற்கெனவே அண்ணல் காந்திக்கும் அரசியல் சாசன சிற்பி அம்பேத்கருக்கும் காவிச் சாயம் பூசி பிறகு களைந்து மூக்கறுபட்டவர்கள் இப்போது திருவள்ளு வருக்குக் காவிச் சாயம் பூசியிருக்கிறார்கள். கடவுளைத் தூற்றுவதும் இறை நம்பிக்கை கொண்டவர்களைப் பழிப்பதும் மார்க்சிஸ்டு களின் வேலை அல்ல;  பாதையும் அல்ல.  கடவுள் வழிபாடும் இறை நம்பிக்கையும் தனிநபர் சம்பந் தப்பட்ட விஷயம்.  அது அடுத்தவர் நம்பிக்கையை வம்புக்கு இழுத்து, கலவரங்கள் ஏற்படுத்து வதை-  இவற்றைக் காரணமாகக் காட்டி மக்களி டையே சிந்தனையற்ற நம்பிக்கைகள் வளர்க்கப் படுவதைத்தான் மார்க்சிஸ்ட் கட்சியும் முற்போக்கு எண்ணம் கொண்டவர்களும்  கேள்வி கேட்கி றார்கள். மத மோதல்களிலும் மூடநம்பிக்கை  வளர்ப்பிலும் முழுமூச்சாக ஈடுபட்டு வரும் பாஜக - சங்பரிவார கும்பல் தெளிய வேண்டுமா? நாங்கள் தெளிய வேண்டுமா?  டுவிட்டர் பாஜக ‘மேதாவி’ சுட்டிக்காட்டியுள்ள  திருக்குறளில் கூறப்பட்டிருக்கும் ‘வாலறிவன்’ என்பது நீங்கள் கூறும் தெய்வங்கள் பட்டியலில் யாரைக் குறிக்கிறது?  சிவனையா? விஷ்ணு வையா? பிள்ளையாரையா?

கடவுள் உருவங்களைச் சுமந்து ஊர்வலங் கள் நடத்தி கலவரங்களைத் தூண்டுவதற்குக் கங்கணம் கட்டிக் கொண்டு இருப்பவர்கள் நீங்கள். எந்தக் கடவுளையும் குறிப்பிட்டு வணங்காமல் தாம் வாழ்ந்த காலத்திற்கு ஏற்ப  அருவ மெய்யி யலை உயர்த்திப் பிடித்தவர் வள்ளுவர்.  அதை உணர்ந்து அவரை மதிப்பவர்கள் நாங்கள். அப்படி யென்றால் தெளிய வேண்டியது நீங்களா? நாங்களா?

கல்வி, கல்லாமை,  கேள்வி,  அறிவுடைமை என்ற நான்கு அதிகாரங்களில் மனிதர்கள் கற்க வேண்டியதன் தேவையை ஆழமாகப் பேசியி ருப்பவர் வள்ளுவர்.  “கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை ” என்று கல்வியை செல்வ மாகக் கூறியவர் வள்ளுவர்.  ஆனால் அவருக்குக் காவி சாயம் பூசும் கும்பல்தான் கல்வியைத் தனியுடைமையாக வைத்துக்கொண்டு மற்ற வர்களையெல்லாம் ஏழையாக - அறியாமையில் உழன்று “முகத்திரண்டு புண்ணுடையர்” ஆக்கி யது. “கற்றிலன் ஆயினும் கேட்க”  என்றார் வள்ளு வர். கேட்கவாவது விட்டார்களா? தெரியாத்தன மாகக் கேட்டாலும் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றச் சொன்னவர்களின் வாரிசுகள் தானே நீங்கள்? 

இடையில் விட்டுவிட்டதை மீண்டும் பிடித்து சனாதனக் கல்விமுறையை நிலைநிறுத்தத் தானே இப்போதும் உங்களின் புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது ?

ஆனால் நாங்கள் எல்லோருக்கும் கல்வி கொடு என்பதை உயர்த்திப் பிடித்து கல்வி யைப் பொதுமை ஆக்கியவர்கள்.  அந்த இலக்கை முழுமையாக எட்டுவதற்குப் பாடுபடுபவர்கள்.  புதிய கல்விக் கொள்கையைக் கைவிட்டு திருந்த வேண்டியவர்கள் நீங்களா? நாங்களா? சமாதான சகவாழ்வு என்பதே உலகத்தை உய்விக்க ஒரே வழி.  எனவே வாழப் பிறந்த மக்கள்  சண்டையிட்டுச் சாக வேண்டாம் என்பதைக்கொள் கையாகக் கொண்டவர்கள் நாங்கள். ஆனால் போர், யுத்தம்,  ராணுவம்,  அணு குண்டு என்று எப்போதும் வெறிக் கூச்சல் போடுபவர்கள் நீங்கள். 

மக்களை வெல்வது போரால் அல்ல; அமைதி யால், மோதல் இல்லாத சூழலால், மக்கள் நல ஆட்சி யால் என்பவர்கள் நாங்கள்.  இதனை இரண்டா யிரம் ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்து  உரைத்தவர் வள்ளுவர். “வேலன்று வென்றி தருவது மன்ன வன் கோல் அதுவும் கோடாது எனின்” இப்போது சொல்ல வேண்டும் அந்தத் திரிபுவாதக் கும்பல் -  தெளிய வேண்டியது நாங்களா? நீங்களா? 

மக்கள் தங்களுக்கு ஆட்சி அதிகாரத்தைத் தந்து விட்டார்கள் என்பதற்காக அடாவடி ஆட்சி நடத்திக் கொண்டிருப்பவர்கள் நீங்கள்.  பண மதிப்பு நீக்கம் என்று சொல்லி ஏழை, எளிய மக்க ளையும் நடுத்தர வகுப்பினரையும் பிச்சைக் காரர்கள் போல அலையவிட்டவர்கள் நீங்கள்.  திரும்பவும் ஜிஎஸ்டி என்ற பெயரால் எல்லாவகை யிலும் கொள்ளையடிக்கிறது உங்கள் ஆட்சி. தொழில்கள் மூடல்; புதிய வேலையும் இல்லை. பழைய வேலையும் காலி.  இப்படி வழிப்பறி செய்யும் ஆட்சி முறையை ஒதுக்கிப் புறந்தள்ளியவர் வள்ளு வர்.  உங்களைப்போன்ற ஆட்சியாளர்களை அவர் சித்தரிக்கும் விதம் இப்படித்தான். 

“வேலோடு நின்றான் இடுஎன் றது போலும்
கோலொடு நின்றான் இரவு” 
திருக்குறளைப் படித்துத் தெளிய வேண்டியது நீங்களா? நாங்களா?

“எற்றிற் குரியர் கயவர் ஒன்று உற்றக்கால் தன்னை விற்றற்குரியர் விரைந்து” என்று வள்ளு வர் கூறியதற்கு ஏற்ப அரசியலில் விலைபோகிற வர்களை விரட்டிப் பிடித்து - அதிகாரப் பசி கொண்டவர்களையும், ஊழல் செய்து சிறை அச்சம் கொண்டவர்களையும் சேர்த்துக் கொண்டு பல மாநிலங்களில் ஆட்சி நடத்திக் கொண்டிருப்பவர்கள் நீங்கள். 

பிரதமர் பதவியே தேடி வந்தபோதும் பெரும் பான்மை மக்கள் பலமும் நாடாளுமன்ற உறுப்பி னர்கள் பலமும் இல்லாமல் அப்பதவியை ஏற்க மாட்டோம் என நிராகரித்தவர்கள் நாங்கள்.  திருக்குறளைக் கற்றுத் தெளிய வேண்டியது நீங்களா? நாங்களா?

“சாத்திரம் பல பேசும் சழக்கர்காள் கோத்திர மும் குலமும் கொண்டு என் செய்வீர்”  என்ற சனா தானச் சாடலுக்கு ஆரம்பப் புள்ளி வைத்தவர் வள்ளுவர்.  செய்கின்ற செயல்கள் காரணமாக சிறப்பு எல்லா மனிதர்களுக்கும் ஒரே மாதிரி இல்லாமல் போகலாம். ஆனால் பிறப்பு எல்லோ ருக்கும் ஒன்றுதான். இதில் ஏற்றத்தாழ்வு இல்லை என்றார் வள்ளுவர்.  “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்”  இந்த வள்ளுவர் எங்கே! ‘சதுர்வர்ணம் மயா சிருஷ்டம்’ நான்கு வருணங்களையும் நான்தான் படைத்தேன் என்று கடவுளே வாக்குமூலம் அளித்ததாகக் கதைவிடும் நீங்கள் எங்கே!

சாதியாலும் மதத்தாலும் மக்களை கூறு போடக் கூடாது.  எல்லாருக்கும் எல்லாமும்.  பிறப்பால் உயர்வு, தாழ்வு என்ற கயமையை விட்டொழிக்க வேண்டும் என்று இடையறாது பேசி வருபவர்கள், அதை வாழ்க்கை நெறியாக வும் கொண்டவர்கள் நாங்கள். சாதி மதவெறி யில் ஊறிப்புழுத்தவர்களே!  திருக்குறளைக் கற்றுத் தெளிய வேண்டியது நீங்களா? நாங்களா?

“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட”  தமிழ்நாட்டில் அவரது உரு வச்சிலைக்குக் காவிச் சாயம் பூசி எதையும் சாதித்து விட முடியாது. “வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்குணர்ந்தவர்கள் உள்ளுவரோ  மனுவாதி ஒரு குலத்துக்கு ஒரு நீதி” என்ற  மனோன்மணீயம் சுந்தரனாரின் வழிகாட்டுத லோடு சேர்ந்து வள்ளுவர் வாக்கில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.  பாவம்! எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று தடுமாறிக் கொண்டிருக்கும் நீங்கள்தான் திருக்குறளைப் படித்துத் தெளிவு பெற வேண்டும். காவிப்பாசி படிந்துவிட்ட உங்களால் அது முடி யாது. “செய்தக்க அல்ல செயக்கெடும்” என்பது அய்யன் திருவள்ளுவர் வாக்கு. அதையா வது படித்துத் தெளிவு பெறவேண்டும் இந்த காவிக்கும்பல்.

 

;