india

img

நாடாளுமன்றத்திற்கு வெளியே இளம்பெண் போராட்டம்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்திற்கு வெளியே இளம்பெண் ஒருவர் இன்று போராட்டம் நடத்தினார்.

கடந்த இரண்டு தினங்களில் ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் ஒருவர், கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளன. சில தினங்களுக்கு முன் ராஞ்சியில், 25 வயதான சட்ட கல்லூரி மாணவி ஒருவர், ஆயுதமேந்திய 12 பேர் குழுவினரால் படுகொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் டெல்லியைச் சேர்ந்த அனு துபே எனும் இளம்பெண், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகுவதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் இறங்கினார். ”என் சொந்த பாரதத்தில் நான் ஏன் பாதுகாப்பாக உணர முடியவில்லை?” என்ற வாசகம் தாங்கிய அட்டையை ஏந்தியவாறு அவர் நாடாளுமன்றத்திற்கு வெளியே நடைபாதையிலேயே அமர்ந்துகொண்டு, போராட்டத்தில் ஈடுபட்டார். 

இதையடுத்து போராட்டத்தைக் கைவிடும்படி போலீசார் கேட்டுக்கொண்டனர். ஆனால் அவர் மறுக்கவே அவரை போலீஸார் கைது செய்தனர். காவல் நிலையத்தில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் செய்தி அறிந்த டெல்லி மகளிர் ஆணைய குழு காவல்நிலையத்தை வந்தடைந்தது. பின்னர், சிறிது நேரத்தில் அவர் காவலிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
 

;