india

img

மத்திய கல்வி நிறுவனங்களில் தலித் பழங்குடியினர் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்

புதுதில்லி, ஜூலை 2-

2019ஆம் ஆண்டு மத்தியக் கல்வி நிறுவனங்கள் (ஆசிரியர் பணியிடங்களில் இடஒதுக்கீடு) சட்டமுன்வடிவு திங்கள் அன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் திங்கள் அன்று இது தொடர்பாக நடைபெற்ற விவாதத்தின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பி.ஆர். நடராஜன் கலந்துகொண்டு பேசியதாவது:

2019ஆம் ஆண்டு மத்தியக் கல்வி நிறுவனங்கள் (ஆசிரியர் பணியிடங்களில் இடஒதுக்கீடு) சட்டமுன்வடிவு மீதான விவாதத்தில் கலந்துகொள்ள வாய்ப்பளித்தமைக்கு முதற்கண் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முதலாவதாக, இந்தச் சட்டமுன்வடிவில் தலித்துகள்/பழங்குடியினர், பொருளாதாரரீதியாக நலிவடைந்த பிரிவினர் மற்றும் சிறுபான்மையினர் என்னும் சொற்களும் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இரண்டாவதாக, மாண்புமிகு உறுப்பினர்கள் ஆ.ராசா மற்றும் திருமதி சுப்ரியா சுலேஜி ஆகியோரின் கருத்துக்களுடனும் முழுமையாக உடன்படுகிறேன். எங்கள் கட்சியின் சார்பில், இந்தச் சட்டமுன்வடிவு, முழுமையானதோர் ஆய்வுக்காக, நாடாளுமன்ற நிலைக் குழுவிற்கு அனுப்பப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பி.ஆர். நடராஜன் கூறினார்.

ஆ.ராசா

முன்னதாக இந்தச்சட்டமுன்வடிவின் மீது உரையாற்றிய திமுக உறுப்பினர் ஆ. ராசா அவர்களும் இதனைத் தெரிவுக்குழுவிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

(ந.நி.)

ReplyReply allForward

;