tamilnadu

img

கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் பி.ஆர். நடராஜன் எம்.பி., பரிந்துரை

கோவை, பிப். 17 –  கோவை இஎஸ்ஐ மருத்துவம னைக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் மற்றும்  ஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்த மத்திய அரசுக்கு கோவை நாடா ளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நட ராஜன் பரிந்துரை செய்துள்ளார். கோவை மாவட்டம், வரதரா ஜபுரம் பகுதியில் இஎஸ்ஐ மருவத் துவக் கல்லூரி மற்றும் மருத்து வமனை செயல்பட்டு வருகிறது. தொழிலாளர்கள், அவர்களின் குடும்பங்கள் பெருமளவு பயன்பெ றும் இஎஸ்ஐ மருத்துவமனையை மேம்படுத்த பல்வேறு முயற்சி களை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒருபகுதியாக திங்களன்று இஎஸ்ஐ மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து மருத்து வமனை முதல்வர் மற்றும் இருப்பிட மருத்துவ அதிகாரி மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனை ஆலோசனைக்குழுவுடன் ஆலோ சனை மேற்கொண்டார்.  இதுகுறித்து பி.ஆர்.நடராஜன் எம்.பி கூறுகையில், கடந்த முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது மருத்துவ கல்லூரி அமைய தொடர்ந்து முயற்சி மேற்கொண்டேன். இதன் பய னாக இஎஸ்ஐ மருத்துவ மனைக்கு புதிய கட்டிடங்கள் மற்றும் நவீன மருத்துவ உபகர ணங்கள் உள்ளிட்ட வசதிகள் உருவாகியுள்ளது. இந்நிலையில் அனைத்து மருத்துவ வசதிகளும் உள்ள மருத்துவமனையாக மாற்று வதற்கான முயற்சியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன். தற்போது மருத்துவமனைக்கு நவீன எம்ஆர்ஐ ஸ்கேன் மற்றும் ரூ.20 லட்சம் மதிப்பிலான ஆம்பு லன்ஸ் வாகனம் ஆகிய வச தியை பெறுவதற்கு மத்திய அரசிற்கு பரிந்துரை கடிதம் வழங்கி யுள்ளேன். உடனடியாக இதனை  பெறுவதற்கான முயற்சியை மேற்கொள்வேன். மேலும், மருத்துவமனையில் உள்ள சிறு சிறு குறைபாடுகள் குறித்து நோயாளிகள் மற்றும் ஊழியர்க ளிடம் கேட்டறிந்தேன்.  இதேபோல இங்கு பணியாற் றும் தூய்மைபணியாளர்கள், காவலர்கள் ஆகியோருக்கு முறை யாக ஊதியம் தராமல் உள்ள தனி யார் நிறுவன ஒப்பந்தாரர் குறித்தும் விவாதிக்கப்பட்டுள் ளது. இதனை ஒழுங்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி யுள்ளோம் என்றார். இதில் இஎஸ்ஐ மருத்துவமனை மேம் பாட்டு ஆலோசனைக்குழு உறுப் பினர் ஆர்.வேலுசாமி மற்றும்  யு.கே.சிவஞானம், கே.ரத்தின குமார் உள்ளிட்டோர் உடனிருந் தனர்.