ஒன்றிய பாஜக மற்றும் மேற்குவங்கத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசுகளின் தவறான நிர்வாகத்தை கண்டித்து மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் சந்திப்பு இயக்கத்தை முன்னெடுத்து பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது. பாராநகர் (வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம்), ராம்பூர்ஹாட் (பிர்பூம்), பைத்யாபூர் (புர்பா பர்துவான்), உலுபெரியா (ஹவுரா), கிருஷ்ணாநகர் (நாடியா), பட் பட் (புர்பா பர்துவான்), மற்றும் பகவங்கோலா (முர்ஷிதாபாத்) ஆகிய இடங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கட்சி ஊழியர்கள் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்றனர். ஊழல் மற்றும் பிளவுவாத மக்கள் விரோத அரசியலை அகற்றுவதற்கான பங்கேற்பாளர்களின் உறுதியை வெளிப்படுத்தும் வகையில், ஒவ்வொரு பொதுக்கூட்டமும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் கண்டது என்பது குறிப்பிடத்தக்கது.