india

img

இந்தியாவில் கொரோனா வைரசால் 6 பேர் பாதிப்பு?

இந்தியாவில் கொரோனா வைரசால் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

உலகம் நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தை கடந்த நிலையில், இந்தியாவில் தில்லியைச் சேர்ந்த ஒருவருக்கும், ஐதராபாத்தைச் சேர்ந்த ஒருவருக்கும்,  ராஜஸ்தானில் இத்தாலி நாட்டை சேர்ந்தவர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை மத்திய சுகாதார அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரசால் 6 பேர்  பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

சீனா, தென் கொரியா, ஜப்பான், ஈரான், இத்தாலி, ஹாங்காங், மக்காவு, வியட்நாம், இந்தோனேசியா, நேபாளம், தாய்லாந்து, சிங்கப்பூர், தைவான் ஆகிய கொரோனா வைரஸ் பரவிவுள்ள நாடுகளில் இருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாக வேறுகூட்டுக்குச் சென்றுவிட்டு இருந்து வரும் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் இந்தியாவுக்குள் நுழையும் முன் கட்டாயமாக மருத்துவப் பரிசோதனை நடத்தப்படும் என்றும்,

சீனா, ஈரான், தென் கொரியா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியர்கள் அவசியம் இல்லாமல் பயணிக்க வேண்டாம் என்றும், இந்த நாடுகளை சேர்ந்தவர்களுக்கு மார்ச் 3-ஆம் தேதிக்கு முன்பாக வழங்கப்பட்டிருந்த அனைத்து வகையான விசாக்கள் ரத்து செய்யப்படுவதாகவும், அவசரமான சூழலில் இந்தியாவுக்கு வர வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் தங்கள் நாட்டில் இருக்கும் இந்தியத்தூதரகத்தை அணுகி புதிதாக விசா பெறலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

;