india

img

நாடு முழுவதும் கொரோனா பரிசோதனைக்கு ரூ.400 நிர்ணயிக்கக்கோரி வழக்கு....

புதுதில்லி:
நாடு முழுவதும் கொரோனா பரிசோதனைக் கட்டணத்தை 400 ரூபாய் என ஒரே மாதிரியாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி  தொடரப்பட்ட வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரிசோதனைக்கு நாடு முழுவதும் உள்ள ஆய்வுக் கூடங்களில் வெவ்வேறு விதமான கட்டணங்கள் வசூல் செய்யப்படுகிறது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடம் அதிருப்தியும் கோபமும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா பரிசோதனைக்கு ஒரே மாதிரியான தொகையான ரூ.400 மட்டுமே கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வழக்கறிஞர் விஜய் அகர்வால் என்பவர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் செவ்வாயன்று நடைபெற்றது.  மனுதாரரின் கோரிக்கை மற்றும் மனுவை விசாரணைக்கு ஏற்பதாக உச்சநீதிமன்ற  நீதிபதிகள் தெரிவித்தனர்.  இதுகுறித்து பதிலளிக்கக்கோரி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி வழக்கை  ஒத்திவைத்தனர்.

;