india

img

கலக்குகிறார் மார்க்சிஸ்ட் கட்சியின் “சமதா”

“வண்ணங்களின் திருவிழாவிற்கு நடப்பாண்டில் எங்கள் தரப்பு பரிசாக ஜே.என்.யூ வெற்றியைத் தருகிறோம்” என்று சமதா அறிவிக்கிறார். அவரது வீடியோவும், பதிவுகளும் பரவுகின்றன. பெரும் அளவில் பகிரப்படுகின்றன. வட இந்தியாவில் மக்களால் கொண்டாடப்படும் ஹோலிப் பண்டிகையன்று, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தலில் இடதுசாரி மாணவர் சங்கங்கள் வெற்றி பெற்றதையே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். 

சமூக வலைத்தளங்களில் புதிய “தொகுப்பாளினி யாக” உருவாகியிருக்கும் சமதா மேற்கு வங்க மக்கள் மத்தி யில் பெரும் ஆதரவைப் பெற்றி ருக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மேற்கு வங்க முகநூல், எக்ஸ் பக்கம், இன்ஸ்டா கிராம், யூடியூப் உள்ளிட்ட அனை த்து சமூக வலைத்தளங்களிலும் காட்சிகளைத் தொகுத்து வழங்கி வருகிறார். முதல் பதிவு வெளி யாகி 12 மணி நேரத்தில் 3 ஆயி ரத்து 500 பேர் தங்கள் கருத்துக்க ளைப் பதிவிட்டிருந்தார்கள். 

இவர் மனிதரல்ல. செயற்கை நுண்ணறிவு மூலம் உரு வாக்கப்பட்ட “தொகுப்பாளினி”. இந்தப் புதிய தொழில்நுட்ப உத்தி, மேற்கு வங்க பாஜக மற்றும் திரிணாமுல் கட்சிகளைக் கலங்க டித்திருக்கிறது. அனைத்துத் தரப்பினரையும், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் மாண வர்களை இந்தப் புதிய உத்தி கவர்ந்து இழுத்துப் போட்டுள் ளது. இந்த ஆதரவுதான் பாஜக மற்றும் திரிணாமுல் கட்சிகள் திண றிப்போய் இந்த உத்திக்கு எதிராகப் பேச வைத்துள்ளது. மின்னணுப் பந்தயத்தில் தங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முந்திவிட்டதைக் கண்டு மிரண்டு போயிருக்கிறார்கள்.

எப்போதுமே  புதியதில் ஆர்வம்
ஜாதவ்பூர் மக்களவைத் தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வேட்பாளரான ஸ்ரீஜன் பட்டாச்சார்யா, “எப்போ தும் நாங்கள் புதிய விஷயங்க ளைப் புகுத்துவதில் ஆர்வமாக இருப்போம். யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாததாக அது இருக்க வேண்டும் என்பதில் கவ னமாக இருப்போம். இந்த செயற்கை நுண்ணறிவு தொகுப் பாளரை நாங்கள் தேர்தல் பிரச்சா ரங்களில் பயன்படுத்தப் போகி றோம்” என்கிறார்.

தொழில்நுட்பங்களுக்கு இவர்கள் எதிரானவர்கள். இப்போது தொழில்நுட்பத்தைக் கையில் எடுப்பதாகப் பேசு கிறார்கள் என்று பாஜகவின் ததாகதா ராய் புலம்பியிருக்கிறார்.  இதெல்லாம் அவர்களுக்கு பொருத்தமானதாக  இல்லை என்று திரிணாமுல் கட்சியின் எம்.பி. சாந்தனு சென் உளறிக் கொட்டியிருக்கிறார். இது குறித் துக் கேட்டபோது, “கணினியை அறிமுகப்படுத்துவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை. அவர்கள் நடைமுறைப் படுத்த விரும்பிய விதம்தான் பிரச்சனையாக இருந்தது. பெரும் அளவு வேலையிழப்பு இருக்கும் என்பதால் அதற்கு எதிர்ப்பு இருந்தது.” என்று ஸ்ரீஜன் பட்டாச் சார்யா பதிலளித்தார்.

“பாஜகவைப் போன்ற போலிச் செய்திகளைப் பரப்புவ தற்காகப் புதிய தொழில்நுட் பத்தை நாங்கள் பயன்படுத்த வில்லை. களத்தில் உள்ள உண்மையை மக்களுக்கு சொல்லப் போகிறோம்” என்கி றார் கட்சியின் தலைவர்களில் ஒரு வரான சமிக் லஹிரி. வாரத்திற்கு இரண்டு செய்தித் தொகுப்புகளை சமதா வழங்கப் போகிறார். அவை வங்க மொழியில் வெளியா கிறது. மேற்கு வங்கத்திற்கு வெளியில் உள்ளவர்களுக்காக இந்தச் செய்தித் தொகுப்பை ஆங்கிலம் மற்றும் இந்தியிலும் வெளியிடும் முயற்சியும் நடக்கிறது.