புதுதில்லி, ஜன. 2 - 2023-ஆம் ஆண்டில் நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர் பாக 28,811 புகார்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன.
இதில் 55 சதவீதம் உத்தரப்பிர தேசத்தில் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக தேசிய மக ளிர் ஆணையம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
குடும்ப வன்முறை, பெண்களை கண்ணியக்குறைவாக நடத்துதல், வரதட்சணை, பாலியல் வன்கொடுமை, பாலியல் வல்லுறவு தொடர்பாக நாடு முழு வதும் 28,811 புகார்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன. குடும்ப வன்முறை தொடர்பாக 6,274, பெண்களை கண்ணி யக்குறைவாக நடத்துதல் தொடர்பாக 8,540, வரதட்சணை துன்புறுத்தல் புகார்கள் 4,797, பாலியல் வன்கொடு மை புகார்கள் 2,349, பெண்களுக்கு எதி ரான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கா மல் காவல்துறை மெத்தனம் தொடர்பாக புகார்கள் 1,618, பாலியல் வல்லுறவு தொடர்பாக 1,537, பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக 805, சைபர் குற்றங்கள் 605, பெண்களை பின்தொடர்தல் தொடர்பாக 472 கௌரவ குற்றங்கள் தொடர்பாக 409 புகார்கள் பதிவாகியுள்ளன.
அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 16,109 புகார்கள் பதிவாகியுள்ளன, அதைத் தொடர்ந்து தில்லியில் 2,411, மகாராஷ்டிராவில் 1,343 புகார்கள் பதிவாகியுள்ளன. பீகாரில் 1,312, மத்தியப்பிரதேசம் 1,165, ஹரியானாவில் 1,115, இராஜஸ்தான் 1,011, தமிழ்நாடு 608, மேற்கு வங்கம் 569, கர்நாடகா 501 என்ற அளவில் புகார்கள் பதிவாகியுள்ளன.