நாட்டின் முக்கிய பல்கலைக் கழகங்களில் ஒன்றான தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) 2024-ஆம் ஆண்டிற் கான மாணவர் சங்கத் தேர்தல் தொடர்பான தேர்தல் ஆணைய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக் கும் பல்கலைக்கழக பொது பேர வைக் கூட்டம் வெள்ளியன்று சபர் மதி தாபாவில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் பிரிவின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரி ஷத் (ஏபிவிபி) பிரிவினர் மேடை களை ஆக்கிரமித்து, சபை உறுப்பி னர்கள் மற்றும் பேச்சாளர்களைத் தடுத்து தேர்தல் ஆணைய உறுப்பி னர்களைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வை தடுத்தனர். இதனை தட்டிக்கேட்ட இடதுசாரிகளுடன் இணைந்த ஜனநாயக மாணவர் கூட்டமைப்பு (டிஎஸ்எப்) தலை வர்கள் மீது, ஏபிவிபி குண்டர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தி யுள்ளனர். அது மட்டுமல்லாமல், வன்முறையை தூண்டும் வகை யில் இழிவான செயல்களை அரங் கேற்றி பல்கலைக்கழக வளா கத்தை அடிக்கடி வட்டமடித்துள்ள னர்.
பெண் என்று கூட பாராமல் தாக்குதல்
ஏபிவிபி குண்டர்கள் நடத்திய தாக்குதலை இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட 15 அமைப்புகளு டன் உள்ள கூட்டமைப்பான இடது சாரி மாணவ கூட்டமைப்பு (டிஎஸ்எப்) வீடியோ ஆதாரத்துடன் அமல்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் ஜேஎன்யு மாணவர் சங்கத் தலைவர் ஆயிஷே கோஷ் ஏபிவிபி குண்டர்களால் தாக்கப் பட்டு, அவர் மீது தண்ணீரை தூக்கி ஊற்றும் காட்சிகள் பதிவாகி யுள்ளன.
டிஎஸ்எப் கண்டனம்
“இந்திய மாணவர் சங்கத்தின் முக்கிய தலைவரும், ஜேஎன்யு மாணவர் சங்கத் தலைவருமான ஆயிஷே கோஷ், ஒரு பெண் என்று கூட பாராமல் அவரை ஏபி விபி குண்டர்கள் தாக்கியுள்ளனர். அவர் மீது தண்ணீர் வீசும் வீடி யோவும் வெளியாகியுள்ளது. ஆயிஷே கோஷுக்கு எதிரான இத்தகைய இழிவான நடத்தையை எந்த வகையிலும் பொறுத்துக் கொள்ள மாட்டோம்” என டிஎஸ்எப் கூட்டமைப்பு எச்சரிக்கையுடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஏபிவிபி குண்டர்களுக்கு ஆதரவாக தில்லி காவல்துறை
இரவு 10 மணி வரை சபர்மதி தாபா மற்றும் ஜேஎன்யு பல்கலைக் கழக வளாகத்தில் ஏபிவிபி குண் டர்கள் இடதுசாரி மாணவ கூட்ட மைப்பின் தலைவர்கள் மீது தாக்கு தல் நடத்தி கடும் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா வின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள தில்லி காவல்துறை சாவகாசமாக நள்ளிரவு 12.30 மணிக்கு பல்க லைக்கழக வாயில் பகுதிக்கு வந்தது. ஆனால் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழையவில்லை. பல்கலைக்கழகத்தில் என்ன நடந் தது என ஒரு வார்த்தை கூட விசா ரணை செய்யவில்லை. ஏபிவிபி குண்டர்களுக்கு ஆதரவாகவே தில்லி காவல்துறை செயல்பட்டது.