நிதி அமைச்சரின் உரை தேர்தல் உரையைப் ்போலவே ஒலிக்கிறது. 2014ஆம் ஆண்டு மோடி அரசாங்கம், ஆட்சிக்கு வந்த சமயத்தில் ஒவ்வோர் ஆண்டும் 2 கோடி பேருக்கு வேலைஅளிப்போம் என்று உறுதி அளித்தது. ஆனால் இத்தனை ஆண்டுகளில் மொத்தம் ஒரு கோடி பேருக்குக்கூட வேலை அளிக்கவில்லை. இப்போது 55 லட்சம் பேருக்கு வேலை அளிப்போம் என்று உறுதி கூறி இருக்கிறது.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த எந்த நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக இந்தியாவின் பொருளாதார நிலை குறித்து நிதி அமைச்சர் வாய்ச்சவடால் அடித்துள்ளார்.
இடைக்காலப் பட்ஜெட்டை ஆய்வு செய்யும் போது, மோடி அரசாங்கத்தின் வளர்ச்சி மாடல், பணக்காரர்களை மேலும் பணக்காரர்க ளாக்கிடக்கூடிய விதத்திலும், ஏழைகளை மேலும் ஏழைகளாக்கும் விதத்திலும் இருப்பதையே காட்டுகிறது.
ஒதுக்கப்பட்ட தொகையையும் செலவழிக்கவில்லை
பட்ஜெட் மதிப்பீடுகளைக் காட்டிலும் வரு வாய் அதிகரித்துள்ளபோதிலும், ஒன்றிய அர சாங்கத்தின் செலவினங்கள் பற்றாக்குறை யைச் சரிக்கட்டுவதற்காக மேலும் சுருக்கப் பட்டிருக்கிறது. நலத் திட்டங்கள் மற்றும் மூலதனச் செலவினங்கள் மீதும் வெட்டு விழுந்திருக்கிறது. இவை எதிர்கால வளர்ச்சியையும், பொருளாதார அடிப்படைகளையும் பாதித்திடும்.
வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த நடவடிக்கைகள், கல்வி, சுகாதாரம், சமூக நலம் மற்றும் தலித்துகள், பழங்குடியினர் மற்றும் இதர திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட் தொகையை விட குறைவாகவே செலவு செய்யப்பட்டிருப்பது தெரியவருகிறது. இவை 2022-23 ஆண்டில் செலவு செய்ததைவிடக் குறைவாகும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான திட்டங்களுக் கான செலவினங்களும் வெட்டிக் குறைக்கப் பட்டிருக்கின்றன.
கசக்கிப் பிழியப்படும் மாநிலங்கள்
உணவு தானியங்களுக்கான மானியம் 2022-23க்கும் 2023-24க்கும் இடையே 60,470 கோடி ரூபாய் வெட்டப்பட்டிருக்கிறது. அதேபோன்று உரத்திற்கான மானியத் தொகையும் 62,445 கோடி ரூபாய் வெட்டப் பட்டிருக்கிறது. மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்திற்கான ஒதுக்கீடு சென்ற ஆண்டைக்காட்டிலும் 4806 கோடி ரூபாய் குறைவாகும். கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களுக் கான செலவினங்களும் உண்மை ரூபாய் மதிப்பில் குறைக்கப்பட்டிருக்கிறது. மாநிலங் களுக்கு அளிக்கப்படும் கடன்கள் மிகவும் குறைவாக இருப்பதால் அவை முன்பைவிட மேலும் கசக்கிப் பிழியப்பட்டிருக்கின்றன.
கிராமப்புற மேம்பாட்டுச் செலவினங்கள் மற்றும் மாநிலங்களுக்கு மாற்றப்பட்டவை தொடர்பாக நடைமுறையில் தேக்க நிலை நீடிக்கிறது. இதன் பொருள், உண்மையான அடிப்படையில் (real terms) வெட்டு ஏற்பட்டிருக் கிறது. மூலதனச் செலவினங்களுக்காகக் கொடுக்கப்பட்ட கடன்கள், ஜிஎஸ்டி இழப்பீட்டிற்குப் பதிலாக முன்பு கொடுக்கப்பட்ட கடனைவிட மிகக் குறைவான தொகையாக இருப்பதன் காரணமாக மாநிலங்கள் கடும் சிரமத்திற்குள் தள்ளப்பட்டுள்ளன.
7.3 சதவீதம் வளர்ச்சி என்பது கற்பனை
மிக மோசமான வளர்ச்சியின் பின்னணியில் ஒன்றிய அரசின் செலவினங்களின் சுருக்கமும், வருவாயின் ஒப்பீட்டளவில் ‘மேம்படுதலும்’ நடந்துள்ளன. 2023-24இல் 7.3 விழுக்காடாக உண்மையான வளர்ச்சி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது முற்றிலும் கற்பனை யாகும். 2023-24இல் பணவீக்க விகிதம் 1.6 விழுக்காடாக குறையும் என்று மதிப்பிடப்பட்டதன் அடிப்படையில் இவ்வாறு கூறப்பட்டது. இது நுகர்வோர் விலைக் குறியீட்டின் (Consumer Price Index) அடிப்படையிலான பணவீக்க விகிதங்களுடன் முற்றிலும் முரணாக உள்ளது. உணவுப் பணவீக்கம் 10 விழுக்காடாக இருக்கும் நிலையில் 6 விழுக்காடு என்று கூறப்பட்டிருப்பது அபத்தமாகும். இந்தியாவில் பணவீக்கம் அதிகமாக இருப்பதன் காரணமாகத்தான் இந்திய ரிசர்வ் வங்கி 2023 பிப்ரவரிக்குப்பின் தன் ரெபோ விகிதத்தை (repo rate) 6.5 விழுக்காடாக உயர்த்தியிருக்கிறது.
மோசமான வளர்ச்சி இருந்தபோதிலும், மெதுவாக வளர்ந்து வரும் வருமானத்தை பெரு வணிகர்கள், பணக்காரர்கள் மற்றும் செல்வந்தர்களுக்கு ஆதரவாகவே அரசாங்கம் அளித்துள்ளது. கோவிட் காலத்திற்கு முன்பு இருந்த நிலையுடன் ஒப்பிடும்போது கார்ப்பரேட் வரிகள் மூலமும், வருமான வரிகள் மூலமும் வருவாய் அதிகரித்திருக்கிறது. இதற்குக் காரணம் வரி விகிதங்கள் அதிகரித்தால் அல்ல, மாறாக மொத்த வருவாயில் பணக்காரர்களின் பங்கு அதிகரித்திருப்பதே காரணமாகும். ‘வளர்ச்சி’ என்ற பெயரில் உழைக்கும் மக்களை அதிக நேரம் வேலை செய்ய வைத்து, ஊதியத்தைக் குறைத்துப் பெற நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள்.
இடைக்கால பட்ஜெட், மோடி அரசாங்கத்தின் வெறுமையை வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கி றது. இந்த பட்ஜெட், பெரும்பான்மை உழைக்கும் மக்களை உறிஞ்சி, விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசிலர் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு வகை செய்யும் விதத்தில் அமைந்துள்ளது.
துரதிர்ஷ்டவசமாக நிதி அமைச்சர் கடந்த பத்தாண்டுகளாக நடைபெற்ற சாதனைகள் குறித்துப் பேசியிருக்கிறார். உண்மையில் இது ஒரு தற்காலிக பட்ஜெட். இருப்பினும் இதில் தொலைநோக்குத் திட்டம் எதுவும் இல்லை.