india

img

கோவாக்சின் , கோவிஷில்ட்-ஐ கலந்து போட்டால் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்- ஐசிஎம்ஆர் தகவல்

கோவாக்சின் , கோவிஷில்ட்-ஐ கலந்து போட்டால் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்- ஐசிஎம்ஆர் தகவல்

 

புதுடெல்லி : இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் , இந்த இரண்டு தடுப்பூசிகளையும் கலந்து போட்டால் நோய் எதிர்க்கும் திறன் அதிகரிக்குமென புதிய தகவலை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது. 

நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராத தடுப்பூசி போடும் பணி தீவிரமாக உள்ளது. இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் அதிகளவில் போடப்பட்டு வருகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்துடன் இணைந்து ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசியைத் தயாரித்து வருகிறது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்-அஸ்ட்ராஜெனேகா கூட்டுக் கண்டுபிடிப்பான கோவிஷீல்டு தடுப்பூசியை புனேவில் உள்ள சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில் , கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளைக் கலந்து பயன்படுத்தினால் பாதுகாப்பானது மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கும் எனவும் ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்துள்ளது. நாட்டில் சில இடங்களில் இரு வேறு தடுப்பூசிகளை மாற்றிப் போட்டதாக எழுந்த தகவலின் காரணமாக இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  

;