india

img

75 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட்டால்  3ஆம் அலை வீசினாலும் இறப்பை  குறைக்கலாம்.... ஐசிஎம்ஆர் விளக்கம்....

புதுதில்லி:
30 நாட்களுக்குள் 75 சதவீதம் பேருக்கு கொரோனா  தடுப்பூசி போட்டுவிட்டால் மூன்றாம்அலை வீசினாலும் இறப்பு எண்ணிக்கையை 37 சதவீதம்  வரை குறைக்கலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் ( ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது. 
ஐசிஎம்ஆரின் இந்த ஆய்வறிக்கையை மருத்துவ இதழான ‘தி லான்செட்’ பிர சுரித்துள்ளது. 

ஆகஸ்ட் மாத இறுதியில் கொரோனா மூன்றாம் அலை இந்தியாவை தாக்கலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தனது கணிப்பை  குறிப்பிட்டுள்ளது.   முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தொடர்ந்து கடைபிடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.சென்னையில் முகக்கவசம் அணியும் பழக்கம் அதிகரித்துள்ளதாகவும், அதனால்தான் தொற்று குறைந்துள்ளது என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் நடத்திய
ஆய்வில் தெரிய வந்துள்ளது. உள்ளூர் நோய் பரவலின் அடிப்படையில், ரேபிட் ரெஸ்பான்ஸ் வேக்சினேஷன் என்ற அதிவிரைவு தடுப்பூசி திட்டத்தை அமல்படுத்தி, குறைந்தது நபருக்கு ஒரு டோஸ் மட்டும் போட்டால் கூட, ஒரு மாதத்தில் 75 சதவீதம் என்கிற இலக்கை எட்டலாம் என்றும் ஐசிஎம்ஆரின் ஆய்வறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.

;