world

img

தீக்கதிர் உலக செய்திகள்

இருநாட்டு தீர்வை அமல்படுத்த  மத்திய கிழக்கு நாடுகள் வேண்டுகோள் 

உலகப் பொருளாதார மன்றத்தின் அமர்வு   ஏப்ரல் 28 - 29 தேதிகளில் சவூதி அரேபிய தலைநகரான ரியாத்தில் நடைபெற்றது. இந்த அமர்வில் கலந்து கொண்ட மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்கள் விரைவில்  காசா பகுதியில் போர்நிறுத்தத்தை கொண்டு வந்து  இரு நாட்டுத் தீர்வை அமல்படுத்த வேண்டுகோள் விடுத்தனர்.மேலும் இஸ்ரேல் ரஃபாவைத் தாக்கினால், அது பேரழிவாக  மாறும் என எச்சரித்துள்ளனர்.

வெளிநாட்டு மாணவர்களுக்கு  வேலை நேரம் அதிகரிப்பு 

வெளிநாட்டு மாணவர்களின் பகுதி நேர வேலை நேரத்தை வாரத்திற்கு 24 மணிநேரமாக அதி கரித்துள்ளது கனடா அரசு. செப்டம்பர் மாதம் முதல் இந்த வேலை நேரம் அமலுக்கு வர உள்ளது. பெரும்பாலான இடங்களில்  வேலை நேரம்  8 மணிநேரம் கொண்டதாக இருப்பதால், புதிய விதியின் அடிப்படையில்  மாணவர்கள் வாரத்திற்கு 3 பகுதி நேர ஷிப்ட்கள் வரை வேலை செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு  9 ஆயிரம் கோடி நிதி

பாகிஸ்தான் அரசுக்கு 9,181 கோடி நிதி வழங்க சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு  ஒப்புதல் அளித்துள் ளது. ஏற்கனவே பாகிஸ்தான் தனது நிதி நெருக்க டியை சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்திடம் கேட்டிருந்த தொகையில் குறிப்பிட்ட அளவு தான் இந்த பணம் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. சவூதியில் நடந்த உலகப் பொருளாதார மன்றத் தில் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினாவுடன் பாகிஸ்தான் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.

இஸ்ரேல் மனித உரிமை  மீறியது  - அமெரிக்கா

இஸ்ரேல் ராணுவத்தின் 5 பிரிவு கள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக  அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. எனினும் இஸ்ரேல் ராணுவத்திற்கு  அமெரிக்கா  தொடர்ந்து உதவிகள் செய்யும் எனவும் தெரிவித்துள் ளது. 2023 காசா மீதான போர் அறிவிப்புக்கு முன்பு காசாவிற்கு வெளியே உள்ள பாலஸ்தீனப் பகுதிகளில் இந்த மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளது எனவும் குறிப் பிட்டுள்ளது.

ஐநா உணவு விநியோகம்  வரி விதிப்பால் பாதிப்பு 

தெற்கு சூடானில்  புதிதாக விதிக்கப் பட்ட வரிகள் மற்றும் கட்டணங்க ளால் ஐநா வழங்கி வந்த நிவாரணத்தில் பாதி ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பால் ஐநா விற்கு அதிக செலவுகள் செய்ய வேண்டிய சூழல் உருவாகியுள்ளது என்றும் அதற்கு போ திய பண இருப்பு இல்லை எனவும் கூறப்பட்டுள் ளது. தற்போது வரை  60,000 பேர் உணவு இழந் துள்ளனர். மேலும் உணவை இழக்கும் மக்களின் எண்ணிக்கை மே இறுதிக்குள் 1,35,000 ஆக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

;