புதுதில்லி, டிச. 8 - அனைத்து தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களும் 5ஜி சேவையை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நிலையில், பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல்-ஐ முன்னேறிச் செல்லவிடாமல், ஒன்றிய பாஜக அரசு பல வகையிலும் முட்டுக் கட்டைகளைப் போட்டு வருகிறது.
3ஜி சேவையைக் கூட முழுமை யாக வழங்க முடியாமலும், 4ஜி சேவையை நோக்கி விரைந்து செல்ல முடியாத வகையிலும், பிஎஸ்என்எல் நிறுவனம் வைக்கப்பட்டு உள்ளது.
தற்போது, நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத்தொடர் நடை பெற்று வரும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கேள்வி நேரத்தில் பங்கேற்று, “ஆத்ம நிர்பார் பாரத் திட்ட முன்னெடுப்பின் கீழ் பிஎஸ்என்எல் நிறுவனம் 3G மற்றும் 4G சேவைகள் வழங்கிட நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளதா?” என்றும், “ஆம் எனில், அந்நடவடிக்கைகளின் விவ ரங்கள் மற்றும் அதற்கான காலவரை யறை என்ன?” என்றும்கேட்டிருந்தார்.
இதற்கு ஒன்றிய தகவல் தொடர்புத்துறை இணையமைச்சர் தேவுசிங் சவுகான், எழுத்துமூலம் பதி லளித்துள்ளார். அதில், “பிஎஸ்என்எல் நிறுவனம், 24 மாத காலத்திற்கு நாடு முழுதும் 4ஜி சேவைகள் வழங்கிட ஒரு லட்சம் இடங்களுக்கான (site களுக்கான) கொள்முதல் ஆணை யைப் பிறப்பித்துள்ளது” என்று மட்டும் மேலெழுந்தவாரியாக பதி லளித்து நழுவியுள்ளார்.