india

img

கொரோனாவுக்கு எதிராகப் போராடும் மருத்துவர்களுக்கு பாரத ரத்னா விருது: மத்திய அரசுக்கு அரவிந்த் கேஜ்ரிவால் கோரிக்கை

இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவி வரும் நிலையில், இரண்டாவது அலையில் போது மருத்துவ பணியில் ஈடுபட்டிருந்த 730 மருத்துவர்களும், முதல் அலையின் போது பணியில் ஈடுபட்டிருந்த 748 மருத்துவர்களும், இதுவரை உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள நாட்டில் உள்ள அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கிட வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள தனது டுவிட்டர் பதிவில் கூறியதாவது, கொரோனாவுக்கு எதிராகப் போராடி வரும் அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள், பாராமெடிக்கல் பணியாளர்கள் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். இது தான்  கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களுக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாகும். இதுதான் தங்களின் குடும்பத்தினரையும், உயிரையும் கருதாமல் மக்களுக்காகப் பணியாற்றும் மருத்துவர்களுக்குச் செய்யும் உண்மையான மரியாதையாக அமையும். இதற்கு ஒட்டுமொத்த தேசமும் மகிழ்ச்சி அடையும் என தெரிவித்துள்ளார்.

 

;