india

img

காலத்தை வென்றவர்கள் : குதிராம் போஸ் பிறந்த நாள்..

02ல் காலனிய எதேச்சதிகாரத்தை ஆயுதந் தாங்கிய நடவடிக்கைகள் மூலம் அகற்ற உறுதி பூண்டிருந்த யுகாந்தார் இயக்கத்தில் இணைந்தார் வங்கத்தின் மகத்தான போராளிகளில் ஒருவரான குதிராம் போஸ். 1905ல் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோதே வங்கப் பிரிவினைக்கு எதிரான இயக்கத்தில் குதிராம் தீவிரப் பங்கேற்றார். 1906ல் குதிராம் மிதுனாப்பூர் சிறை மைதானத்தில் சத்யன் போஸ் எழுதிய ‘சோனார் பெங்கால்’ என்ற புரட்சிப் பிரசுரத்தை வினியோகித்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டார்.

ஆனால் போலீசாரைத் தாக்கிவிட்டு அவர் தப்பிவிட்டார். 1906, மே 16 அன்று மேலும் ஒரு ராஜ துரோகத்துக்காக அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். ஆனால் அவரது இளம் வயதைக் கணக்கில் கொண்டு விரைவில் விடுவிக்கப்பட்டார். அடுத்த ஆண்டு 1907ல் அவர் ஹட்காச்சியாவில் தபால் பைகளைக் கொள்ளையடிப்பதில் பங்கு பெற்றார். டிசம்பர் 6, 1907ல் வங்காள கவர்னர்ஆண்ட்ரூ பிரேசர் சிறப்பு ரயிலில் வந்து கொண்டிருந்தபோது அவர்மீது குண்டு வீசுவதில் வேறு சிலருடன் ஈடுபட்டார்.
கல்கத்தாவின் தலைமை நீதிபதி கிங்ஸ்போர்டு  காட்டுமிராண்டித்தனமான தீர்ப்புகளுக்குப் பெயர் போனவர். எனவே யுகாந்தர் அமைப்பு நீதிபதி கிங்ஸ்போர்டுக்கு மரணதண்டனை விதித்து அதை நிறைவேற்றும் பொறுப்பை குதிராம் மற்றும் பிரபுல்லாசம்கியிடம் ஒப்படைத்தது. கிங்ஸ்போர்டு அச்சமயம் பாதுகாப்பு காரணங்களுக்காக மாறுதல்செய்யப்பட்டார்.ஏப்ரல் 13, 1908 அன்று மாலை இருளில் பிரபுல்லாவும், குதிராமும் ஐரோப்பிய கிளப்புக்கு சென்று கொண்டிருந்த கிங்ஸ்போர்டின் இரட்டை குதிரை வண்டியின்மீது குண்டு வீசினர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதில் பயணம் செய்தது இந்த மோசமான நீதிபதியல்ல; மாறாக ஒரு ஐரோப்பியப் பெண்மணி திருமதி கென்னடியும் அவர் மகளுமாவர். அவர்களிருவரும் தவறாகக் கொல்லப்பட்டனர். போலீஸ் விரட்டியதில் பிரபுல்லா சம்கி அன்றிரவே தாமே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். குதிராம் வெய்னி ரயில்வே ஸ்டேசனில் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டு மரணமடைந்தார்.

===பெரணமல்லூர் சேகரன்===

;