india

img

ஓரணியில் திரண்ட மதச்சார்பற்ற சக்திகள்.... அசாமில் பாஜகவுக்கு எதிராக 6 கட்சிகள் இணைந்து கூட்டணி....

புதுதில்லி:
2021-ஆம் ஆண்டின் ‘மே’ மாதத்திற்குள்தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப் பட்டாக வேண்டும். 

அதற்கான ஏற்பாடுகளில் மத்திய தேர்தல் ஆணையம் ஏற்கெனவே இறங்கி விட்டது. கட்சிகளும் தங்கள் பணிகளைத் துவங்கி விட்டன.இந்நிலையில், அசாம் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்கு, காங்கிரஸ், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் (எம்.எல்.) மற்றும் அஞ்சலிக் ஞான மோர்ச்சா ஆகிய 6 கட்சிகள் அடங்கிய புதியகூட்டணி உருவாகியுள்ளது.கவுகாத்தியில் செவ்வாயன்று 6 கட்சித்தலைவர்களும் கூட்டாக செய்தியாளர் களை சந்தித்தனர். அப்போது புதிய கூட்டணியை அறிவித்த அவர்கள், “எந்தவொருகட்சியும் எந்தவொரு முன் நிபந்தனையுடனும் கூட்டணியில் சேரவில்லை” என்றும்,“கடந்த 5 ஆண்டுகளில் புதிய வகையிலானவெறுப்பு அரசியலை முன்னெடுக்கும் பாஜக அரசை வீழ்த்துவது ஒன்றே தங்களின் நோக்கம்” என்றும் குறிப்பிட்டனர். மேலும், “பாஜக-வுக்கு எதிரான வேறு சிலகட்சிகள் வந்தாலும், அவர்களுக்கும் எங்கள்கூட்டணியின் கதவுகள் திறந்தே உள்ளன” என்றும் தெரிவித்தனர்.

;