india

img

தடுப்பூசி போடும் பணி 35 சதவிகிதம் குறைந்தது.... மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்தும் திருந்தாத மோடி அரசு....

புதுதில்லி:
இந்தியாவில் கொரோனா தொற்றுப் பரவலும், அதனால் ஏற் படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், தடுப்பூசி போடும் பணியைவிரைவுபடுத்த வேண்டும் என்பதே, உலக சுகாதார நிறுவனம் மற்றும்மருத்துவ வல்லுநர்களின் வேண்டுகோளாக உள்ளது.முகக் கவசம், தனிமனித இடைவெளி, பொதுமுடக்கம் எல்லாம் இருந்தாலும், அவை இடைக்கால ஏற்பாடுதானே தவிர, தொற்றால் ஏற்படும் உயிரிழப்பைக் குறைக்க தடுப்பூசி மட்டுமேஒரே வழி என்றும், அதனை வீடு, வீடாககொண்டு செல்ல வேண்டும் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்.

ஆனால், அதற்கு நேர்மாறாக, இந்தியாவில் கடந்த வாரத்தைக் காட்டிலும் தடுப்பூசி போடும் பணி, 35 சதவிகிதம் குறைந்திருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மே 23 அன்று, நாட்டிலுள்ள 10 லட்சம் பேரில் சராசரியாக 980 பேருக்குமட்டுமே தடுப்பூசி போடப்பட்டது. இதுகடந்த வாரம் 10 லட்சம் பேரில் 1455 பேர் என்ற அளவிற்கு உயர்ந்தது.சர்வதேச அளவில் தினமும் சராசரியாக 10 லட்சம் பேரில் 3564 பேருக்குதடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது என்பதை கணக்கில் கொள்ளும்போது, இந்த 1455 பேர் என்ற எண் ணிக்கையே குறைவுதான். அதாவது உலக சராசரியில் பாதிதான்.ஆனால், தற்போது அந்த பாதியிலும் 35 சதவிகிதம் குறைந்துபோயிருப்பதுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்படுவோரின் எண்ணிக்கை 1455 பேர் என்பதில் இருந்து 980 ஆககுறைந்துள்ளது.இந்தக் காலத்தில், மகாராஷ்டிரா, குஜராத், தில்லி ஆகிய மாநிலங்கள்மட்டுமே, தங்கள் மக்களில் அதிகமானோருக்கு தடுப்பூசிகளைச் செலுத்தியுள்ளன. மற்ற பெரும்பாலான மாநிலங்கள் தடுப்பூசி கிடைக்காமல், ஏற்கெனவே செயல்பட்டு வந்த முகாம்களையும் மூடியுள்ளன.தடுப்பூசி பற்றாக்குறைப் பிரச் சனை சரியாக இன்னும் சில வாரங்களாவது ஆகும் என்பதால் வரும் காலங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேலும் பின்னடைவைச் சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது.

;