india

img

ரூ.90 ஆயிரம் வரை சம்பளம்; பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள இன்ஜினியரிங் உதவியாளர் டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம்;
பணி
: Engineering Assistant Trainee
1. எலக்ட்ரானிக்ஸ் - 10
2. மெக்கானிக்கல் - 03

சம்பளம்: மாதம் ரூ.24,500 - 90,000

வயதுவரம்பு: 31.07.2022 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: டிப்ளமோ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். முதல் 6 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சின்போது மாதம் ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்படும். பின்னர் நிரந்தர பணி வழங்கப்படும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.09.2022