india

img

மருத்துவ சுகாதாரப் பணியாளர்களுக்கான ரூ.50 லட்சம் கோவிட் காப்பீடு திட்டம்... புதிய நிறுவனத்துடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை....

புதுதில்லி:
கொரோனா வைரஸ் காலத்தில் பணியாற்றும் மருத்துவ சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட ரூ. 50 லட்சத்துக்கான காப்பீடு திட்டத்தை மத்திய அரசு கடந்தமாதம் 24-ம் தேதியுடன் ரத்து செய்துள்ளது. புதிய காப்பீடு நிறுவனத்துடன் மத்திய அரசுபேச்சு நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா முதல் அலையின்போது கோவிட் நோயாளிகளை கையாளும் பணியில் இருக்கும் செவிலியர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவ, சுகாதாரப் பணியாளர்கள் திடீரென உயிரிழப்பைச் சந்தித்தால் அவர்களுக்கு ரூ.50 லட்சம் காப்பீடுதரும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.இந்நிலையில், இந்த காப்பீடுத் திட்டம்கடந்த மாதம் 24-ம் தேதி முடிந்துவிட்டதால், அந்த காப்பீடு திட்டத்தை மத்திய அரசு ரத்துசெய்து, புதிய நிறுவனத்துடன் காப்பீட்டுக்காக பேசி வருவதாக ஆங்கில நாளேடு ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலர் அசோக் பூஷண் மாநிலங்களுக்கு கடந்த மாதம் 24-ம் தேதி எழுதிய கடிதத்தில், “கோவிட் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் கொரோனாவில் உயிரிழப்பைச் சந்தித்தால் அவர்களுக்கு நிதியுதவிவழங்கும் காப்பீடு திட்டம் சிறப்பாகச் செயல்பட்டது, அவர்களுக்குப் பாதுகாப்பாகஇருந்தது. இந்த திட்டம் மார்ச் 24-ம் தேதியுடன்முடிந்துவிட்டது. மார்ச் 24ம் தேதி நள்ளிரவுவரை காப்பீடு கோருபவர்கள் மட்டுமே இந்தத் திட்டத்துக்கு பயன் பெற தகுதியானவர்கள். இந்த காப்பீடு திட்டத்தில் விண்ணப்பித்து இருக்கும் தகுதியானவர்கள் தங்களின்ஆவணங்களை ஒரு மாதத்துக்குள் வழங்கிடவேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.கொரோனா வைரஸ் முதல் அலையின் போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், முதல் 90 நாட்களுக்கு மட்டும் மருத்துவ,சுகாதாரப் பணியாளர்களுக்கு காப்பீடு வழங்கும்திட்டத்தை கடந்த ஆண்டு மார்ச் 26 ஆம்தேதி கொண்டு வந்தார். ஆனால் கொரோனாவைரஸ் பரவல் சூழலைக் கருத்தில் கொண்டுஇந்த திட்டம் ஓர் ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இப்போது இந்தத் திட்டம் முடிந்துவிட்டதால், புதிய நிறுவனத்துடன் மத்தியஅரசு பேசி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எப்போது இந்த காப்பீடு திட்டம்மருத்துவ சுகாதாரப் பணியாளர்களுக்கு புதிதாக மீண்டும் தொடங்கும் என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை.

கொரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக இருக்கும் நிலையில் தங்கள் உயிரை துச்சமாக மதித்து பணியாற்றும் மருத்துவ, சுகாதாரப் பணியாளர்களுக்கு விரைவாக புதிய காப்பீடு திட்டத்தை மத்திய அரசு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

;