india

img

விவசாயிகள் நாடாளுமன்றத்திற்கு ராகுல், எம்.பி.க்கள் நேரில் வாழ்த்து....

புதுதில்லி:
விவசாயிகளுக்கு விரோதமாக ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தில்லியில் நடைபெற்று வருகின்ற விவசாயிகள் நாடாளுமன்றத்திற்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி  மற்றும் எம்.பி.க்கள் வெள்ளியன்றுநேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

விவசாயிகள் நாடாளுமன்றத்தின் வெள்ளிக்கிழமை அமர்வுக்கு தமிழ்நாடுவிவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் சபாநாயகராக இருந்து நடத்தினார். வெள்ளியன்று விவசாயிகள் நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விவசாயிகள்  கலந்து கொண்டனர்.மோடி அரசாங்கம் கொண்டுவந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்கள் மூன்றையும் எதிர்த்து, கடந்த ஒன்பது மாதங்களாக விவசாயிகள் தில்லி எல்லையில் போராடி வருகின்றனர்.வியாழக்கிழமையன்று தமிழகத்திலிருந்து ஆயிரம் விவசாயிகள் தில்லி நாடாளுமன்ற வீதியில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.வெள்ளிக்கிழமை நடைபெற்ற  விவசாயிகள் நாடாளுமன்றத்தில் தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர். விவசாயிகள் நாடாளுமன்ற சபாநாயகராக பெ.சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்தை நடத்தினார்.

விவசாயிகள் நாடாளுமன்றத்தில் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து குல்பீர்சிங் முன்மொழிந்து பேசினார். யோகேந்திர யாதவ் வழிமொழிந்து பேசினார்.விவசாயிகள் நாடாளுமன்றத்திற்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., முன்னாள் ஒன்றிய அமைச்சர் சசிதரூர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் எளமரம் கரீம், மக்களவைக்குழு தலைவர்  பி.ஆர்.நடராஜன், மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்,  திமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, மாநிலங்களவை உறுப்பினர் மல்லிகார்ஜூன கார்கே, மதிமுக ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசன், பஞ்சாப் மக்களவை உறுப்பினர் பிரதாப் சிங் பஜ்வா  உள்ளிட்ட பலர்நேரில் வந்து வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். (ந.நி.)

;