india

img

பஞ்சாப் தடுப்பூசிச் சான்றிதழிலும் பிரதமர் மோடியின் படம் நீக்கம்.... பூபேஷ் பாகேல், ஹேமந்தை பின்பற்றிய அம்ரீந்தர்....

பாட்டியாலா:
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கு அரசு சார்பில்சான்றிதழ்கள் வழங்கப்படுகின் றன. காப்பீடு, பயணம் போன்ற பலவற்றுக்கும் இது பயன்படும் என்பதால் தடுப்பூசி போட்டுக் கொண்ட அனைவரும் இந்த சான்றிதழை நேரடியாகவோ அல்லது ஆன் லைன் மூலம் தரவிறக்கம் செய்தோ வைத்துள்ளனர். இந்த சான்றிதழில்பிரதமர் மோடியின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது.முன்களப் பணியாளர்கள், 45 வயதிற்கு மேற்பட்ட முதியவர் களுக்கு மட்டுமே தடுப்பூசியில் முன்னுரிமை வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த மே 1 முதல் 18-இல்இருந்து 44 வயதுக்கு உட்பட்டோரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. அதேநேரம் இவர்களுக் கான தடுப்பூசி செலவை மாநில அரசுகளின் தலையில் சுமத்தியது. மேலும், 150 ரூபாய்க்கு மத்திய அரசுக்கு கிடைத்துவந்த தடுப்பூசியை, மாநில அரசுகளுக்கு விற்கும்போது,400 முதல் 600 ரூபாய் அளவிற்குவிலையை உயர்த்திக் கொள்ளலாம் என்றும் வழி ஏற்படுத்திக் கொடுத்தது.

இதனால் மாநிலங்கள் கடும்அதிர்ச்சி அடைந்தன. தடுப்பூசிசெலுத்தும் பொறுப்பிலிருந்து மோடி அரசு விலகிக் கொண்டதற்கு கடும் கண்டனங்களையும் தெரிவித்தன. எனினும் மோடி அரசுமுடிவை மாற்றிக் கொள்ளவில்லை.தற்போது மாநில அரசுகளே, தங்களின் சொந்த நிதியிலிருந்து, தடுப்பூசிகளை கொள்முதல் செய்து, மக்களுக்குச் செலுத்தி வருகின்றன. இந்நிலையில்தான், தடுப்பூசி வழங்க முடியாது என்று மறுத்துவிட்ட பின், தடுப்பூசி சான்றிதழில் மட்டும் பிரதமர் மோடியின் படம்எதற்கு? என்று அதனை பல்வேறுமாநிலங்கள் நீக்க ஆரம்பித்துள்ளன.முதன்முதலாக சத்தீஸ்கர் மாநிலத்திலும், அதைத்தொடர்ந்து, ஜார்க்கண்ட் மாநில தடுப்பூசி சான் றிதழ்களிலும் பிரதமர் மோடியின் படம் நீக்கப்பட்டது. தற்போது பஞ்சாப் மாநில தடுப்பூசி சான்றிதழில் இருந்தும் மோடியின் படம் நீக்கப் பட்டுள்ளது.

;