india

img

மருத்துவர்களுக்கான ஊதியத்தை இருவாரத்திற்குள் வழங்கிடுக..... வடக்கு-கிழக்கு தில்லி மாநகராட்சிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

புதுதில்லி:
புதுதில்லியில் வடக்கு மற்றும் கிழக்கு தில்லி மாநகராட்சி நிர்வாகங்கள் தங்களின் கீழ் இயங்கும் ஒன்பது மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களின் அக்டோபர் மாத ஊதியத்தை இரு வார காலத்திற்குள் வழங்க வேண்டும் என்று தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கஸ்தூர்பா காந்தி மருத்துவமனை மருத்துவர்கள், தங்களுக்கு இந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து வழங்கப்பட வேண்டியஊதியத்தை வழங்காவிட்டால் ராஜினாமா செய்யவுள்ளதாக நாளேடுகளில் செய்தி  வெளியாகியிருந்தன. வடக்கு மாநகராட்சி கார்ப்பரேஷன் கீழ் இயங்கும் ஆறு மருத்துவமனைகளின் ரெசிடெண்ட் டாக்டர்களுக்கு உதவிப்பணம் (ஸ்டைபெண்ட்) மற்றும்ஊதியம் வழங்கப்படாதது குறித்து ஏற்கனவே மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் தற்போது கிழக்கு மாநகராட்சி கார்ப்பரேஷன்கீழ் இயங்கும் ஸ்வாமி தயானந்த் மருத்துவமனை, சந்திவாலா மகப்பேறு மருத்துவமனையிலும் சாதரா பாலி கிளினிக்கிலும் டாக்டர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறியது.இந்திய மருத்துவ சங்கம் தாக்கல் செய்த மனுவின் மீது உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஹிமா கோலி மற்றும் சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வாயம் விசாரணை நடத்தியது.இதில் வடக்கு மற்றும்கிழக்கு தில்லி மாநகராட்சி நிர்வாகங்கள் தங்களின் கீழ் இயங்கும் ஒன்பது மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களின் அக்டோபர் மாத ஊதியத்தை இரு வார காலத்திற்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.(ந.நி.)

;