india

img

காஷ்மீர் ஏரிக்குள் கவிழ்ந்தது பாஜகவின் பிரச்சார படகு

ஸ்ரீநகர்:
காஷ்மீரில் மாவட்டக் கவுன்சில்தேர்தல் நடந்து வருகிறது. இதற் கான தேர்தல் பிரச்சாரத்தை பாஜகவினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.இதனொரு பகுதியாக, காஷ் மீரின் ‘தால்’ ஏரியில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் தலைமையில் ஞாயிறன்று படகுப் பிரச்சாரம் நடைபெற்றது. அப்போது பிரச்சாரத்தில் அணிவகுத்த பாஜகவினரின் மரப்படகு ஒன்று திடீரென ஏரிக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.நல்வாய்ப்பாக அவர்களை காஷ்மீரிகளும், அங்கிருந்த பேரிடர் மீட்புக்குழுவினரும், போலீசாரும் இணைந்து மீட்டு கரை சேர்த்தனர்.இந்நிலையில், பாஜகவினர்சென்ற படகு ஏரிக்குள் கவிழ்ந்துவிபத்துக்குள்ளான புகைப்படங்களை சிலர் சமூவலைத் தளங்களில் வெளியிட்டு, பாஜகவை கிண்டலடித்தும் விமர்சித்தும் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.“இறக்குமதி செய்யப்பட்ட தாமரைகள் எங்கள் ‘தால்’ ஏரியில் மலராது” என்று ஜம்மு - காஷ்மீர் மக்கள்ஜனநாயகக் கட்சியின் தலைவர் நஜ்மு சாகிப் தெரிவித்துள்ளார். “காஷ்மீரின் ‘தால்’ ஏரியில் பாஜகமூழ்கியது” என்று காங்கிரஸ் தலைவர் சல்மான் நிஜாமி குறிப்பிட்டுள்ளார்.

;