india

img

இந்திய மருத்துவ கழகத்தில் வேலைவாய்ப்பு

போபாலில் உள்ள இந்திய மருத்துவ கழகத்தில்(எய்ம்ஸ்) காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம்;

விளம்பர எண். ADM-2(2)/AIIMS/Bhopal/Rectt.Cell/Direct/2022/01.

பணி: Registrar

காலியிடம்: 01

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு ஒரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று 7 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 

பணி: Blood Transfusion Officer

காலியிடம்: 01

வயதுவரம்பு: 21 முதல் 40க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் எம்டி முடித்து ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 

பணி: Medical Physicist

காலியிடம்:  01

தகுதி:  சம்மந்தப்பட்ட பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது இயற்பியல் பாடத்தில் முதுநிலைப் பட்டம் பெற்று ரேடியோலாஜிக்கல் மெடிக்கல் பிசிக்ஸ் -இல் முதுநிலைப் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

 

பணி: Accounts Officer

காலியிடம்: 01

வயதுவரம்பு: 21 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: வணிகவியில் பாடத்தில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் இநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 

பணி: Tutor/Clinical Instructor(Nursing)

காலியிடங்கள்: 33

வயதுவரம்பு: 35க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தகுதி: நர்சிங் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 3 ஆண்டுகள் கற்றல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.1000, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.250 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

 

விண்ணப்பிக்கும் முறை: http://www.aiimsbhopal.edu.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.06.2022

 

மேலும் விவரங்கள் அறிய http://www.aiimsbhopal.edu.in என்ற இணையதளத்தின்கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.