india

img

மக்கள் விரோத ஒன்றிய அரசுக்கு எதிரான போராட்டத்தை ஒடுக்க அவசர சட்டம்.... ஜூலை 23-ல் அகில இந்திய எதிர்ப்பு தினம்-கிளர்ச்சிப் போராட்டம்..... மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை அறைகூவல்....

புதுதில்லி:
பாதுகாப்பு உற்பத்தித் துறையைத் தனியாரிடம் தாரை வார்ப்பதைக் கண்டித்தும், ஒன்றிய அரசுக்கு எதிரானபோராட்டத்தை ஒடுக்க அத்தியாவசியப் பாதுகாப்புப் பணிகள் அவசரச்சட்டம் பிறப்பித்திருப்பதைக் கண்டித்தும் வரும் ஜூலை 23 அன்று அகில இந்திய எதிர்ப்பு தினம் அனுசரிக்குமாறு மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை மற்றும் அகில இந்திய சம்மேளனங்கள் -சங்கங்களின் கூட்டுக்குழு அறைகூவல் விடுத்துள்ளது.இது தொடர்பாக சிஐடியு, ஏஐடியுசி, தொமுச உட்பட இணைந்துள்ள மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடையும், அகில இந்திய சம்மேளனங்கள் மற்றும் சங்கங்களின் கூட்டுக்குழுவும் இணைந்த கூட்டம் ஜூலை 8 அன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் பாதுகாப்பு உற்பத்தி ஊழியர்கள் மத்தியில் இயங்கிடும்ஐந்து சம்மேளனங்களும் இணைந்து பாதுகாப்பு உற்பத்தியைத் தனியாரிடம் தாரை வார்ப்பதை எதிர்த்து, ஒன்றுபட்ட போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காகத் திட்டமிட்டிருப்பதை ஆய்வு செய்து அதற்குத் தங்களின் முழுஆதரவையும் தெரிவிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது. அதன்பின்னர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஒன்றிய அரசு, பாதுகாப்பு உற்பத்தியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கார்ப்பரேட்டுகளுக்கு அந்நிய நேரடிமுதலீட்டில் 100 சதவீதம் அனுமதித்து,கணிசமான அளவிற்கு உற்பத்திதொடங்குவதற்கு அனுமதித்திருப்பதை மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை ஆழ்ந்த கவலையுடன் ஆய்வுசெய்தது. அரசின் நடவடிக்கைகள்அனைத்தும் பாதுகாப்பு சக்திகளின் அடிப்படைப் தேவைகள் அனைத்தையும் கடுமையாகப் பாதிக்கும். அதன் மூலம் நாட்டின் நலன்களுக்கும் கேடுபயக்கும். இத்தகைய தேச விரோதக்கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு எதிராக பாதுகாப்பு ஊழியர் சம்மேளனங்கள் ஒன்றுபட்டு உறுதியுடன்போராட்டங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன. 

விரிவடையும் எதேச்சதிகார நடவடிக்கை
அவர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக, ஒன்றிய அரசாங்கம் அத்தியாவசியப் பாதுகாப்புப் பணிகள் அவசரச் சட்டத்தை அவசரகதியில் பிரகடனம் செய்திருப்பதற்கு, மத்திய சங்கங்களின் கூட்டுமேடை கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறது. இந்த அவசரச்சட் டம் பாதுகாப்புத்துறையில் பணிபுரியும் ஊழியர்களின் வேலைநிறுத்த உரிமையைத் தடை செய்கிறது. இந்த அவசரச்சட்டத்தில் எண்ணற்ற கொடுங் கோன்மைமிக்க தண்டனை ஷரத்துக்கள் காணப்படுகின்றன. அனைத்துவிதமான ஜனநாயக எதிர்ப்பு நடவடிக்கைகளையும் இந்த அவசரச்சட்டம் தடை செய்கிறது. இத்தகைய கொடூரமான எதேச்சதிகார நடவடிக்கைகளை இதர துறைகளுக்கும் விரிவுபடுத்திட ஒன்றியஅரசாங்கத்திற்கு அதிகாரம் அளித்திட இந்த அவசரச்சட்டம் வகை செய்கிறது.இத்தகைய கொடூரமான அவசரச்சட்டத்தை மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை கண்டிப்பதுடன் ஒன்றிய அரசாங்கத்தின் எதேச்சதிகார நடவடிக்கைகளை உறுதியுடன் எதிர்த்துநின்று போராடுவது என்றும் தீர்மானிக்கிறது.

பொதுத்துறை நிறுவனங்களிலும், ரயில்வே, சுரங்கங்கள், நிதித்துறைமற்றும் பாதுகாப்பு உற்பத்தித்துறைகளில் தனியார்மயக் கொள்கைகளை உந்தித்தள்ளுவதற்காக ஒன்றிய அரசாங்கம் அவசரகதியில் அறிவித்துள்ள எதேச்சதிகார அவசரச் சட்டத்திற்கு எதிராக கண்டனக் குரல்களை எழுப்ப வேண்டும் என்று நாட்டிலுள்ள உழைக்கும் மக்களுக்கும் ஒட்டுமொத்த தொழிற்சங்க இயக்கங்களுக்கும் மத்தியத் தொழிற் சங்கங்களின் கூட்டுமேடை அறைகூவல் விடுக்கிறது. உண்மையில் இந்த அரசாங்கமானது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பெருமுதலாளிகள் பயன் அடையவேண்டும் என்பதற்காகவே நாட்டின் சொத்துக்களையும் உள்கட்டமைப்பு வசதிகளையும் அவர்களுக்குத் தாரை வார்த்திட நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கிறது.அரக்கத்தனமான இந்த அவசரச் சட்டத்திற்கு எதிராக வரும் ஜூலை 23 அன்று நாடு தழுவிய அளவில் எதிர்ப்பு மற்றும் கிளர்ச்சிப் போராட்டங்களை அனைத்துத் தொழிலாளர்களும் அவர் களுடைய சங்கங்களும் அனுசரித்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.