india

img

செங்கோட்டைக்குள் புகுந்த தீப் சித்துவின் கும்பல் மோடி - அமித்ஷாவின் கைக்கூலிகளே... தார்மீக பொறுப்பேற்று எங்களை நாங்களே தண்டித்துக் கொள்கிறோம்... நாளை விவசாயிகள் உண்ணாவிரதம்.....

புதுதில்லி:
வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி குடியரசுத் தினத்தன்று தலைநகர் தில்லியில் நடைபெற்ற டிராக்டர் பேரணியின்போது ஒரு குறிப்பிட்ட தரப்பினர், வழிகாட்டு நெறிமுறைகளை மீறியதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களுக்கு தார்மீகப் பொறுப்பேற்றுக் கொள்வதாக சம்யுக்த கிசான் மோர்ச்சா (ஒன்றுபட்ட விவசாயிகள் முன்னணி) கூறியுள்ளது. நடந்த அந்தத் தவறுக்கு பொறுப்பேற்று விவசாயிகள் தங்களுக்குத் தாங்களே தண்டனை கொடுத்துக்கொள்ளும் விதமாக ஜனவரி 30 அன்று மகாத்மா காந்தி தியாகத் தினத்தையொட்டி, நாள் முழுவதும் உண்ணாவிரதம் மேற்கொள்வது என்றும் சம்யுக்த கிசான் மோர்ச்சா அறிவித்துள்ளது.

மோடி அரசின் கொடிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் தில்லியை முற்றுகையிட்டு, 1.1டிகிரி செல்சியஸ் என்ற அளவிற்கு பதிவாகியுள்ள மிக மிக உறைபனி குளிரையும் பொருட்படுத்தாமல் கடந்த 61 நாட்களாக, இந்த உலகின் மிகப் பிரம்மாண்டமான விவசாயிகள் எழுச்சி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின்  தலைமையில் உருவான அகில இந்தியவிவசாயிகள் போராட்ட ஒருங்கிணை ப்புக்குழுவின் ஒருங்கிணைப்பில் கிட்டத்
தட்ட 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கங்கள் இணைந்து சம்யுக்த கிசான் மோர்ச்சா என்ற பதாகையின்கீழ் இந்த பிரம்மாண்டமான எழுச்சியை நடத்தி வருகின்றன.

பாஜக ஆட்சியின் திட்டமிட்ட சூழ்ச்சி
இதற்கு ஆதரவாக நாடு முழுவதும் விவசாயிகளும் தொழிலாளர்களும் தொடர் போராட்டங்களில் கடந்த 2 மாதகாலத்திற்கும் மேலாக ஈடுபட்டு வருகின்றனர். வேளாண் சட்டங்கள் மற்றும் மின்சாரச் சட்டம் ஆகியவற்றை ரத்துசெய்ய வேண்டும் என்ற ஒற்றைக்கோரி க்கையுடன் நாட்டையே உலுக்கியுள்ள இந்தப் பேரெழுச்சியின் உச்சக்கட்ட போராட்டங்களில் ஒன்றான ஜனவரி 26 குடியரசுத் தினத்தன்று தில்லியை முற்றுகையிட்டு டிராக்டர் அணிவகுப்பு நடத்துவது என முடிவு செய்யப்பட்டு,பேரெழுச்சியுடன் டிராக்டர் பேரணி நடைபெற்றது. நாடு முழுவதும் டிராக்டர் பேரணிகளும், இருசக்கர வாகனப் பேரணிகளும் நடைபெற்றன. தில்லியில் நடந்த அந்தப் பேரணியின்போது ஒரு குறிப்பிட்ட தரப்பினர் மட்டும் பேரணியிலிருந்து விலகிச் சென்று செங்கோட்டைக்குள் நுழைந்துதேசியக் கொடிக்கு அருகிலேயே வேறு ஒரு கொடியை ஏற்றிய சம்பவமும் இதையொட்டி நடந்த வன்முறைச் சம்பவங்களும், விவசாயிகளின் போராட்டத்தை சிறுமைப்படுத்தும் விதமாக பாஜகஆட்சியாளர்களால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட சூழ்ச்சி என்பது அம்பலமாகியுள்ளது.  இந்த நிலையில்ஜனவரி 27 புதனன்று மாலை சிங்கு எல்லையில் சம்யுக்த கிசான் மோர்ச்சாதலைவர்கள் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர்கள் பேட்டியளித்தனர். அப்போது, பிப்ரவரி 1 அன்று

தொடர்ச்சி 3ம் பக்கம்

;