india

img

‘படுக்கையறை உரையாடலைக் கூட ஒட்டுக் கேட்கிறது பாஜக அரசு... ரன்தீப் சிங் சுர்ஜேவாலா விளாசல்....

புதுதில்லி:
பெகாசஸ் ஸ்பைவேர் வேவுவேலை விவகாரத்தில் ஒன்றிய பாஜக அரசை காங்கிரஸ் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கடுமையாக விமர்சித்துள்ளார்.

படுக்கையறை உரையாடல் களைக் கூட ஒட்டுக்கேட்கும் அரசாக மோடி அரசு உள்ளது என்றுஅவர் சாடியுள்ளார்.இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது :

இந்திய பாதுகாப்புப் படைகள், கேபினெட் அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக செயல் பாட்டாளர்களை வெளிநாட்டு உளவு செயலி மூலம் உளவுபார்த்தது என்பது, தேசத்துரோகம் மட்டுமல்ல, தேசப்பாதுகாப் புக்கு மன்னிக்க முடியாத விதிமுறை மீறல்.அரசியலமைப்புச் சட்டம்காலில்போட்டு மிதிக்கப்பட் டுள்ளது, சட்டத்தின் ஆட்சி கொலைசெய்யப்பட்டுள்ளது, பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரின் பதவிப் பிரமாணம் என்பதுபொய்யானது என்பது தெரிந்துவிட்டது நாட்டின் பாதுகாப்பு ஒட்டு மொத்தமாக பறிபோயுள்ளது. இது தேசத்துரோகம். இந்தியர்களின் தகவல்களை வெளிநாட்டு நிறுவனம் திருடுவதற்கு மோடி அரசு அனுமதித்துள்ளது.படுக்கையறை உரையாடல் களைக் கூட ஒன்றிய அரசு ஒட்டுக்கேட்கிறது. ஒன்றிய உள்துறை அமித் ஷா-வே இதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும். அவர்தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். பிரதமர் மோடியின் ஒப்புதல் இல்லாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை. அரசியல் சட்டத்தின்படி பதவியேற்ற இருவரும் அதனை மீறி விட்டார்கள்.இவ்வாறு ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.

;