மும்பை:
மகாராஷ்டிரத்தில் பாஜக ஆட்சியமைக்கக்கூடாது என முஸ்லிம்கள்விரும்பியதால்தான், அங்கு சிவசேனாவுக்கு ஆதரவு கொடுத்தோம் என அம்மாநில காங்கிரஸ் தலைவரும், மாநில அமைச்சருமான அசோக்சவான் கூறியதாக வெளியான செய்திக்கு பாஜக கண்டனம் தெரிவித்திருந்தது.
பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘முஸ் லிம்களுக்காகவே மகாராஷ்டிர சிவசேனா அரசில் இணைந்ததாக காங்கிரஸ் தலைவர் கூறுகிறார். அப்படியானால் இந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்டவர்கள் என்ன பாவம் செய்தனர்?”என்று கேள்வி எழுப்பினர். மேலும், இதன் மூலம் இந்துக் களை காங்கிரஸ் கட்சி அவமதித்து விட்டதாக அலறிய சம்பித் பத்ரா, காங்கிரஸ் கட்சியை, இனிமேல் ‘முஸ்லிம் லீக் காங்கிரஸ்’ என்றே அழைக்க வேண்டும் என்றும் அதிரடிகாட்டினார். இதற்கு காங்கிரஸ் கட்சி தற் போது பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் செய் தித் தொடர்பாளர் ஜெய்வீர் செர்கில் அளித்துள்ள பேட்டியில், “பாஜக-வின் தேசவிரோத மனப்பான்மை, பொருளாதார சீரழிவில் பாராமுகம் ஆகியவற்றின் அடிப்படையில், பாஜக-வுக்கு 3 பெயர்களை காங்கிரஸ் வைத்திருக்கிறது. 1. ‘நாதுராம் கோட்சே கட்சி’, 2. ‘ஊழல் - வெற்றுவாக்குறுதிகள் கட்சி’ மற்றும் ‘மக்களை ஏமாற்றும் கட்சி’ ஆகியவை தான் அந்தப் பெயர்கள் என குறிப்பிட்டுள்ளார்.