india

img

ஒரே ஒரு மருந்து பரிந்துரைச் சீட்டுக்கு 2,628 ஸ்ட்ரி ஃபேபிப்ளூ மாத்திரைகளா? பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் மீது விசாரணைக்கு உத்தரவு....

புதுதில்லி:
கொரோனா சிகிச்சைக்கான மருந்து,மாத்திரைகளைப் பதுக்கி வைத்ததாக, இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பீர் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார்.குறிப்பாக, டாக்டர் கார்க் என்பவரின், ஒரு மருந்துச் சீட்டை (Prescription) வைத்து, 2 ஆயிரத்து 628 ஸ்ட்ரிப் ஃபேபிப்ளூ (Fabiflu) மாத்திரைகளை கம்பீர் வாங்கிக் குவித்தது எப்படி? என்று தில்லி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.மேலும், இதுதொடர்பாக விசாரணை நடத்தி, ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு, மத்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கொரோனா தொற்றுக் காலத்தில் ஃபேபிப்ளூ மாத்திரைகளை பதுக்கியதற்காக கம்பீர் மற்றும் 2 பேர் மீது, தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இதன்மீதான விசாரணையின்போதே நீதிபதிகள் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.

மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரி இந்தபிரச்சனையை சீரியஸாக அணுக வேண்டும்’ என்று கூறியுள்ள நீதிபதிகள், ‘எப்படி இந்தச் சங்கிலித் தொடர் உருவானது, யார் மீது நடவடிக்கை எடுப்பது? மருத்துவர் மீதா? கம்பீர் மீதா, அல்லது ஒரு மருந்துச் சீட்டிற்கு இத்தனை கொரோனா சிகிச்சை மாத்திரைகளை வழங்கிய விற்பனையாளர் மீதா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

;