புதுதில்லி:
கொரோனாவிற்கான தடுப்பு மருந்துகளை பதுக்கி வைத்த விவகாரத்தில், பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டு இருப்பதாக டி.சி.ஜி.ஐ. எனப்படும் இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (Drugs Controller General of India - DCGI) தெரிவித்துள்ளது.
கொரோனா சிகிச்சைக்கான ஃபேபிப்ளூ (Fabiflu) மாத்திரைகளை அதிகமான எண்ணிக்கையில் வாங்கி பதுக்கி வைத்ததாக, முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பீர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, டாக்டர் கார்க் என்பவரின், ஒரு மருந்துச் சீட்டை (Prescription) வைத்து, 2 ஆயிரத்து 628 ஸ்ட்ரிப் ஃபேபிப்ளூ மாத்திரைகளை கம்பீர், தனது அறக்கட்டளை பெயரில் வாங்கிக் குவித்தது எப்படி? என்று தில்லி உயர் நீதிமன்றமே தலையிட்டு கேள்வி எழுப்பியது.
இதுதொடர்பாக விசாரணை நடத்தி, ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு, இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தி ற்கு கடந்த வாரம் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.இந்நிலையில், தில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் விபின் சங்கி, ஜஸ்மீத் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழனன்று இந்த வழக்கு மீண்டும் விசார ணைக்கு வந்தது.அப்போது, முந்தைய உத்தரவின்படி அறிக்கை சமர்ப்பித்த இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையம் ‘கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஃபேபி ப்ளூ மாத்திரைகள் மற்றும் மருத்துவ ஆக்சிஜனை கவுதம் கம்பீர் அறக்கட்டளையானது விதிகளுக்குப் புறம்பாக கொள்முதல் செய்து, இருப்பு வைத்து, விநியோ கித்து குற்றம் புரிந்துள்ளது. சட்டவிதிகளின்படி இது விசாரணைக்குரிய அல்லது தண்டனைக்குரிய குற்றம்தான்’ என்று தெரிவித்தது.இதேபோல் ஆம் ஆத்மி எம்எல்ஏ பிரவீன் குமாரும், மருந்துகளை பதுக்கியது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டது. இதனை ஏற்றுக்கொண்டு, சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்ட தில்லி உயர் நீதிமன்றம், அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.