india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்...

தொலைபேசியில் இருந்து அலைபேசிக்கு அழைக்க எண்களுக்கு முன்பாக ஜீரோவை இணைப்பது கட்டாயம் என்று இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கூறியுள்ளது. ஜனவரி 1 முதல் புதிய நடைமுறை அமலுக்கு வரவுள்ளதாக டிராய் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

                                     *****************

விதிமீறல் கட்டடங்கள் தொடர்பாகநடவடிக்கை எடுக்க பல்வேறு சட்டங்கள் உள்ளன. ஆனால் எந்தநடவடிக்கையும் எடுக்காத தமிழகஅரசு மற்றும் சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம்  தெரிவித்தனர். 2015-ல் ஏற்பட்ட வெள்ளத்துக்கு பின்னரும் கூட அதிகாரிகள் இன்னமும் பாடம் கற்கவில்லை என்று தெரிவித்தனர். 

                                     *****************

குற்றம்சாட்டப்பட்டவர்களை அடிக்க வசதியாக தமிழக காவல்நிலையங்களில் சிசிடிவி கேமிரா பொருத்தவில்லையா? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நாட்டிலுள்ள அனைத்து காவல்நிலையங்களிலும் சிசிடிவி கேமிரா பொருத்தக்கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

                                     *****************

பருவ நிலை மாற்றத்திற்கு முக்கியகாரணியாக உள்ள பெரும் கார்ப்பரேட் ஆலைக் கழிவு வாயுக்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கிலும் கழிவு வாயுக்கள் வெளியேற்றம் கணிசமாக குறையவில்லை என்று உலகவானிலை அமைப்பு தெரிவித் துள்ளது.

;