india

டிராக்டர்கள் உற்பத்தியில் சாதனை

சென்னை, ஏப்.13 உலக அளவில் மிகவும் பிரபலமான டிராக்டர் பிராண்டுகளில் சோலிஸ் யான்மர் டிராக்டரும் ஒன்று. இவற்றின் மேம்பட்ட தொழில்நுட்பம், வாடிக்கையாளர்களுக்கு முழு திருப்தி மற்றும் கரடு முரடான சூழலிலும் நீடித்து உழைக்கும் சிறப்பான செயல்திறன் போன்றவை இதன் சிறப்பம்சங்களாகும்.  எதிர்கால நம்பிக்கை, விவசாயிகள்தான் என்ற தொலைநோக்கு அணுகுமுறையோடு டிராக்டர்களை விற்பனை செய்து வரும் சோலிஸ் யான்மர் நிறுவனம் சென்ற நிதியாண்டில் (2021-22) 13 ஆயிரம் டிராக்டர்களை உற்பத்தி செய்து சாதனை புரிந்துள்ளது. இந்தியச் சந்தையில் நுழைந்த இரண்டே ஆண்டுகளில் இத்தகைய சாதனையை இந்நிறுவனம் புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம் தனது  100 ஆண்டு கால ஜப்பானியத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இந்திய வேளாண் சந்தையில் அசைக்க முடியாத இடத்தைப் பிடிக்கத் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே 7 ஐரோப்பிய நாடுகளில் சோலிஸ் யான்மர் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.