india

img

மணிப்பூர் செல்லும் 'இந்தியா' கூட்டணி கட்சித்தலைவர்கள்

இந்தியா கூட்டணி கட்சியினர் மணிப்பூர் சென்று அங்குள்ள நிலவரத்தை ஆய்வு செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினர் நடத்திய போராட்டம் இனக் கலவரமாக மாறி கடந்த 2 மாதங்களாக அங்கு வன்முறை நீடித்து வருகிறது.

இந்நிலையில், குகி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி கலவரக்காரர்கள் ஊர்வலமாக அழைத்துச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மணிப்பூரில் வன்முறை தொடங்கிய நேரத்தில், கடந்த மே 4-ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

மணிப்பூரில் பெண்கள் பாலியல் வன்முறை செய்யப்பட்ட சம்பவம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி கட்சித் தலைவர்கள் மணிப்பூர் செல்ல முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.