india

img

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட்

சிஎம்எஸ்-01 தகவல்தொடர்பு செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட் இன்று வெற்றிகரமாக ஏவப்பட்டது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பூமி கண்காணிப்பு பணிக்காக 1,410 கிலோ எடை கொண்ட சி.எம்.எஸ்-01 என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோளை வடிவமைத்து, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவுதளத்திலிருந்து ஏவுவதற்காக நேற்று பிற்பகல் 2.41 மணிக்கு கவுண்ட் டவுன் தொடங்கியது. 24 மணி நேர கவுண்ட் டவுன் முடிந்ததையடுத்து, இன்று மாலை 3.41 மணிக்கு சிஎம்எஸ்-01 தகவல் தொடர்பு செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது.

இந்தத் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் மூலம் சி-பேண்ட் அலைவரிசையை இந்தியா மட்டுமின்றி, அந்தமான் நிகோபர், லட்சத்தீவுகளிலும் அலைவரிசையைப் பெற முடியும்.

விண்ணில் சீறிப்பாய்ந்த பிஎஸ்எல்வி-சி50 ராக்கெட் வெற்றிகரமாக பூமியின் நீள்வட்டப் பாதையில் சிஎம்எஸ்-01 செயற்கைக்கோளை நிலைநிறுத்தியது என்று இஸ்ரோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிஎம்எஸ்-01 செயற்கைக்கோள் இஸ்ரோவின் 42வது தகவல் தொடர்பு செயற்கைக்கோள் என்பது குறிப்பிடத்தக்கது.

;