லக்னோ:
ஆதித்யநாத் தலைமையிலான உ.பி. பாஜக ஆட்சியில், கொரோனா பற்றி யார் பேசினாலும், அவர்கள் மீது தேசத்துரோகச் சட்டம் பாய்ந்து விடும்; பாஜகஎம்எல்ஏக்களாகவே இருந்தாலும் அதுதான் நிலைமை என்று பாஜக எம்எல்ஏ ஒருவரே கண் ணீர் விட்டுள்ளார்.உ.பி. மாநிலம் சீதாபூர் தொகுதி பாஜக எம்எல்ஏவாக இருப்பவர் ராகேஷ் ரத்தோர்.இவர்தான், ‘உ.பி. மாநிலத்தில் நிகழும் கொரோனா அவலங்கள் குறித்து பேச முடியாத நிலைதங்களுக்கு உள்ளது’ என்றுசெய்தியாளர்கள் சந்திப்பில்பகிரங்கமாக தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
‘உ.பி. மாநிலத்தில், எந்தஎம்எல்ஏ-வாவது தங்கள் கருத்தை தெரிவிக்க உரிமைஇருக்கிறது என்று நினைக்கிறீர் களா? இல்லை. எல்லாம் நன்றாக இருக்கிறது என்று மட்டுமே ஒரு எம்எல்ஏ கூற முடியும்; அரசு கூறுவதைத்தான் கூற வேண்டும்; அதைத்தாண்டி கூடுதலாக ஏதாவது பேசிவிட்டால் என் மீதும் துரோகி என்று முத்திரை குத்தப்படும்; தேச துரோகசெயல்கள் தடுப்புச் சட்டம் பாயும்’ என்றும் ராகேஷ் ரத்தோர்கொதித்துள்ளார். எம்எல்ஏக் களான தங்களுக்கு ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சியில் எந்த மதிப்பும் இல்லை என்றும் கண்ணீர் விட்டுள்ளார். உ.பி. முதல்வர் ஆதித்யநாத், கொரோனாவை எதிர் கொள்ளும் விஷயத்தில், எம்எல்ஏ ராம்கோபால் லோதி, மத்திய அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார், ராகேஷ் ரத்தோர் என சொந்தக் கட்சியினரிடமே எதிர்ப்பை சந்தித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.