கயத்தாறு ஒன்றிய அலுவலகம் முன்பு விவசாயத் தொழிலாளர்கள் நூதனப் போராட்டம்
100 நாள் வேலை சம்பள பாக்கி கேட்டு
தூத்துக்குடி,ஏப். 25 100 நாள் வேலைக்கு கடந்த ஆறு மாதமாக சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. இந்த சம்பளத்தை உடனடியாக வழங்க கோரி கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பாக ஒப்பாரிப் போராட்டம் நடைபெற்றது 100 நாள் வேலை ஈடுபட்டுள்ள விவசாய தொழிலாளர்களுக்கு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் குறிப்பாக கயத்தாறு ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கடந்த ஆறு மாதங்களாக சம்பள பாக்கி நிலுவையில் உள்ளது. ஒன்றிய பாஜக அரசாங்கம் தமிழ்நாட்டுக்கு 100 நாள் வேலைக்கான நிதியை விடுவிக்காமல் இருப்பதினால் சம்பள வழங்கப்படாமல் உள்ளது. இதை கண்டித்தும் ஒன்றிய அரசாங்கம் உடனடியாக கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதியை ஒதுக்க வலியுறுத்தியும் தமிழக அரசு தமிழக நிதியிலிருந்து உடனடியாக சம்பளத்தை வழங்க வலியுறுத்தியும் 100 நாள் வேலையை முழுமையாக வழங்கவும் வேலை வழங்கப்படாத நாட்களுக்கு வேலையில்லா கால சம்பள வழங்க கோரியும் கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட குழு உறுப்பினர் பெரியசாமி பாண்டியன் தலைமையில் ஒப்பாரி போராட்டம் நடைபெற்றது இந்தப் போராட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பூங்கோதை, மாவட்ட செயலாளர் கு. ரவீந்திரன் ,சி பி எம் கயத்தாறு ஒன்றிய செயலாளர் சாலமன், தாலுகா குழு உறுப்பினர்கள் சீனி பாண்டி, ஜெயக்குமார், காமநாயக்கன்பட்டி துரை உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.