ஆக்ரா அருகே இந்திய விமானப் படையின் மிக்-29 போர் விமானம் விபத்துக்குள்ளானது.
ரஷ்ய தயாரிப்பு மிக்-29 ரக விமானங்கள் விமானப் படையில் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே சோங்கா கிராமத்தில் மிக்-29 ரக போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது.
அப்போது நல்வாய்ப்பாக விமானி பாராசூட் மூலமாக உயிர் தப்பினார். கடந்த செப்டம்பர் மாதம் ராஜஸ்தான் பகுதியில் இதே மிக்-29 ரக விமானம் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
இவ்விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக இந்திய பாதுகாப்புத் துறை தகவல் தெரிவித்துள்ளது.