புதுதில்லி,ஜன.12- முற்றிலும் இந்திய நாட்டின் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப் பட்ட இலகுரக போர் விமான மான தேஜஸ் முதன்முறையாக விமானம் தாங்கிக் கப்பலில் இறங்கி சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து கடற்படை உய ரதிகாரி கூறுகையில், தேஜஸ் விமானம் கடந்த 20 ஆண்டு களாக பல்வேறு மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. இதன் ஒருபகுதியாக அந்த விமானத்தை போர்க்கப்பலில் இறக்குவதற்கு முடிவு செய்யப்பட்டது. இத னைத் தொடர்ந்து விமானம் தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விக்கிரமாதித்யாவில் தேஜஸ் விமானம் வெற்றிகரமாக இறக்கப்பட்டது. மணிக்கு 237 கிலோ மீட்டர் வேகத்தில் வந்த விமானம் அரஸ்டர் லேண்டிங் என்ற முறையில் குறிப்பிட்ட இடத்தில் வெற்றிகரமாகத் தரை யிறங்கியது என்று தெரிவித்தார்.