india

img

நாடு முழுவதும் இளைஞர்கள் மறியல் : பீகாரில் ரயில் எரிப்பு! ‘அக்னிபாத்’ திட்டத்திற்கு எதிராக போராட்டம் வெடித்தது!

புதுதில்லி, ஜூன் 16 - ராணுவ ஆட்சேர்ப்பில் காண்ட்ரா க்ட் முறையை புகுத்தும் மோடி அரசின் ‘அக்னிபாத்’ திட்டத்திற்கு, நாடு முழு வதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. உத்தரப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான், ஹரியானா, தமிழ்நாடு, ஜம்மு - காஷ்மீர் என பல்வேறு மாநிலங் களில் இளைஞர்கள் வீதிக்கு வந்துள்ள னர். அவர்கள் சாலை மற்றும் ரயில்களை மறித்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர். நரேந்திர மோடி அரசு, இந்திய ராணுவத்தில் ‘அக்னி பாத்’ (‘Agnipath’ Recruitment Scheme) என்ற புதிய வேலைவாய்ப்புத் திட்டத் தை உருவாக்கி இருப்பதாக கடந்த புதன்கிழமையன்று அறிவித்தது. அதா வது, தொழிற்துறையில் தற்காலிக ஒப்பந்தத் தொழிலாளர் முறையைக்  கொண்டுவந்தது போல,  ராணு வத்திலும் தற்காலிக ஒப்பந்த வீரர் களை நியமிக்கும் திட்டத்தைத்தான் ‘அக்னி பாத்’ என்ற பெயரில் வெளியிட்டது. இதன்படி 17.5 முதல் 21 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள், இனி நிரந்தர மாக அல்லாமல் ராணுவத்தில் 4 ஆண்டு களுக்கு காண்ட்ராக்ட் அடிப்படை யில் பணிக்குச் சேர்க்கப்படுவார்கள். இவர்கள் ‘அக்னி வீரர்கள்’ (Agniveer) என்று அழைக்கப்படுவார்கள். தரைப் படை, கடற்படை, விமானப்படை ஆகிய மூன்று படைப் பிரிவுகளிலும் கீழ்நிலை ஊழியர்களாக பணியமர்த் தப்படும் இவர்களுக்கு மாத ஊதியம் 30 ஆயிரம் ரூபாய் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். 4 ஆண்டுகளுக்குப் பின் இவர்களில் 75 சதவிகிதம் பேர் பணியிலிருந்து விடு விக்கப்படுவார்கள். அவர்களுக்கு ஒய்வூதியம் எதுவும் வழங்கப்படாது.

மாறாக, இந்த வீரர்களின் சம்பளத்தி லிருந்து மாதம் 30 சதவிகிதம் (ரூ. 9 ஆயி ரம் முதல் ரூ. 12 ஆயிரம் வரை) பிடித்தம்  செய்யப்பட்டு, அதே அளவிற்கான தொகையை அரசாங்கமும் சேர்த்து பணப்பலன் என்ற அளவில் ரூ. 11 லட்சத்து 71 ஆயிரத்தை வழங்கும்.  ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்த  திட்டத்தை கடந்த செவ்வாய்க்கிழமை யன்று அறிவித்த போது, “இது ஒரு புரட்சிகரமான திட்டம்” என்றார். “இந்த பணி நியமன முறை ராணுவத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தும், ராணு வத்தில் இளைஞர்கள் சேர ஊக்கு விக்கும். இந்திய ராணுவம் எப்போதும் இளமையானதாக இருக்கும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும்” என்றும் புளகாங்கித மாக கூறியிருந்தார். ஆனால், மோடி அரசு அறிவித்து ள்ள ‘அக்னிபாத்’ திட்டம் நாடு முழு வதும் தற்போது கடும் எதிர்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது. உத்தரப்பிரதே சம், பீகார், ராஜஸ்தான், ஜம்மு - காஷ்மீர், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போராட்டம் வெடித்துள்ளது. ராணுவப் பணிக்காக தயாராகி வந்த இளைஞர்கள், சாலை களை மறித்தும், ரயில்களை மறித்தும் ஆவேசமான போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

‘அக்னிபாத்’ திட்டத்தைக் கிழித்தெறிக : சிபிஎம்

ஒன்றிய அரசு, கொண்டுவர உத்தேசித்துள்ள ‘அக்னிபாத் திட்டத்தை’க் கிழித்தெறிய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “நாட்டின் நலன்களுக்குக் கேடுபயத்தி டும் அக்னிபாத் திட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுதிபட ஏற்கவில்லை. நான்கு ஆண்டு காலத்திற்கு ‘ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்தினரைத்’ தேர்வு செய்வதன் மூலம் தொழில்முறை ராணுவத்தினரை உருவாக்கிட முடியாது. ராணுவத்தினரின் ஓய்வூதியப் பணத்தைச் சேமிப்பதற்காகக் கொண்டுவரப்பட்டுள்ள இந்தத் திட்டம் தொழில்முறை ராணுவத்தினரின் தரத்தை யும், திறமையையும் மிக மோசமாக சமரசம் செய்திடும். கடந்த இரண்டு ஆண்டு காலமாகவே இந்திய ராணுவத்திற்கு ஆட்கள் தெரிவு செய்யப்படவில்லை.

ராணுவத்திற்கு வழக்கமாக ராணுவத்தினரைத் தெரிவு செய்வதற்குப் பதிலாக, இந்தத் திட்டமானது நான்கு ஆண்டு காலத்திற்குப் பின்னர் அவர்களுக்கு எதிர்காலத்தில் எவ்விதமான வேலைவாய்ப்பு உத்தரவாதமுமின்றி, ஒப்பந்த அடிப்படையில் ஆட்களைத் தெரிவு செய்கிறது. இது ஓர் ஆபத்தான நிலையை உருவாக்கிடும். அதன்பின்னர் அவர்கள் தனியார் நடத்திடும் சேனை களுக்கு வேலை செய்ய இழுத்துச் செல்லப் படலாம். இது ஏற்கனவே கடுமையான நிலைக்கு இட்டுச்சென்றுள்ள நம் சமூகக் கட்டமைப்பை மேலும் அபாயகரமான ஆபத்துக்களுக்குத் தள்ளிவிடும். குறைந்தபட்ச அளவிற்குக்கூட வேலை பாதுகாப்பு இன்றி ஓர் உச்சபட்ச  தியாகத்திற்கு இளைஞர்கள் தயாராக வேண்டும் என்று இளைஞர்களை அறை கூவி அழைப்பது கிரிமினல்தனமான தாகும். இதற்கெதிராக நாடு முழுதும் தன்னிச்சையாக எழுந்துள்ள கிளர்ச்சிப் போராட்டங்கள் இந்தத் திட்டத்திற்கு எதிராக எழுந்துள்ள கோபத்தைப் பிரதிபலிக்கிறது. ‘அக்னிபாத்’ திட்டம் உடனடியாகக் கிழித்தெறியப்பட வேண்டும் என்றும், ராணுவத்திற்கு வழக்கமாக எப்போதும் ஆட்களைத் தேர்வு செய்வதுபோலவே தேர்வு செய்ய வேண்டும் என்றும் இதனை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கோருகிறது. இவ்வாறு அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.  (ந.நி.)

புதனன்று பீகார் மாநிலம் முசாபர்பூர் நெடுஞ்சாலையில் குவிந்த இளை ஞர்கள், “கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக ராணுவத்திற்கு ஆட்சோ்ப்பு பணி நடைபெறவில்லை. எனவே வழக்கமான ஆட்சோ்ப்பு நடைபெறும் என 2 ஆண்டுகளாக காத்திருந்தோம். ஆனால் அரசு நான்கு ஆண்டுகளுக்கு காண்ட்ராக்ட் அடிப்படையில் பணி என்ற புதிய திட்டத்தை அறிவித்து உள்ளது. இதனை ஏற்க முடியாது! இதற்குப் பதிலாக எங்களை அரசே கொன்று விடட்டும்” என்று முழக்கங்க ளை எழுப்பினர். சாலைகளில் டயர்களை கொளுத்திப் போட்டு எதிர்ப்பைத் தெரி வித்தனர். இந்நிலையில், பீகார் இளைஞர்களின் இந்தப் போராட்டம் வியாழனன்று மேலும் தீவிரம் அடைந்தது.  பீகாரின் நவாடா பகுதியில் சாலையில் திரண்ட ராணுவத்தில் சேர விரும்பும் இளை ஞர்கள் டயர்களை எரித்து போராட்டம்  நடத்தினர்.

பீகாரின் பாபுவா ரோடு ரயில் நிலையத்தில் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலையும் அவர்கள் மறித்தனர். ரயில் தண்ட வாளங்களில் டயர்களை எரித்துப் போட்டனர். இதில் ரயில் பெட்டி ஒன்று தீப்பிடித்து எரிந்தது. போராட்டம் தீவிரம் அடைந்த நிலை யில், இளைஞர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் வீசி கலைக்க முயன்றனர். அப்போது போலீசார் மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. ஜெகநாபாத்தில் போலீசாரும் போராடிய இளைஞர்களும் சரமாரியாக கற்களை வீசிக் கொண்டனர். இதேபோல் இளைஞர்களின் போராட்டத்தினால் பீகாரின் பல்வேறு இடங்கள் போர்க்களமாகின. ஹரியானா மாநிலத்தில், ரேவாரி, சர்க்கி - தாத்ரி மற்றும் ரோஹ்தக் உட்பட மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் இளை ஞர்கள் சாலைகளை மறித்து போராட்டம் நடத்தினர். 2 ஆண்டுகளாக ராணுவத்திற்கு ஆட்சேர்க்காமல் தங்களின் வேலை வாய்ப்பை பறித்ததுடன், தற்போது காண்ட் ராக்ட் முறையையும் புகுத்தி வஞ்சிப்பதா? என்று அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். ‘அக்னிபாத்’ திட்ட அறிவிப்புக்காக பிரதமர் மோடிக்கு, ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் நன்றி தெரிவித்திருந்த நிலை யில், மாநில இளைஞர்கள் மோடி அரசுக்கு தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

வேலூரில் சாலை மறியல்
தமிழ்நாட்டில், வேலூர் புதிய பேருந்து நிலையம் எதிரில் வேலூர், திருவண்ணா மலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங் களை சேர்ந்த இளைஞர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வியாழனன்று சாலை மறிய லில் ஈடுபட முயன்றனர். கடந்த 2019 ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் நடை பெற்ற உடற்தகுதித் தேர்வில் தேர்வாகியும், கொரோனாவைக் காரணம் காட்டி தங்களு க்கு எழுத்து தேர்வு நடத்தப்படவில்லை என்று கூறிய இந்த இளைஞர்கள், உடனடியாக எழுத்துத் தேர்வை நடத்துவதுடன், ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகளுக்கு மட்டும் பணி வழங்கும் அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்த னர். காவல்துறையினர் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதேபோல ராஜஸ்தான், ஜம்மு - காஷ்மீர் மாநிலங்களிலும், அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது.