india

img

பொதுத்துறை வங்கிகளின் இணைப்பால் பாதிக்கப்பட்ட கிராமமக்கள், விவசாயிகளுக்கு செய்த மாற்று திட்டம் என்ன? மக்களவையில் பி.ஆர்.நடராஜன் கேள்வி

புதுதில்லி:
வங்கிகள் இணைப்பு பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் திங்களன்று மக்களவையில் கேள்வி எழுப்பினார். அதில், வங்கிகள் இணைப்பின் கொள்கை, நோக்கம் என்ன?  அரசின்பொதுத்துறை வங்கிகள் இணைப்பால்பல வங்கிக் கிளைகள் மூடப்பட்டுள்ளனவா?வங்கிக் கிளைகள் மூடப்பட்டதால், ஊரக வளர்ச்சியில் ஏற்பட்ட எதிர்மறையான  தாக்கம்குறித்து அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? இணைப்பால் பாதிக்கப்பட்ட ஊரக மக்கள் மற்றும் விவசாயிகளுக்காக செய்யப்பட்ட  மாற்று திட்டம் என்ன? என்றுபல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

இதற்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் பதிலளித்து பேசியதாவது: வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு, விரிவான வசதிகள் மற்றும் சேவைகளை அளிப்பதோடு , இணை திறன்பயன்களை உணரவும், அளவு சார் ஆதாயங்களை அடையவும், வங்கிகளை போட்டித் திறன் கொண்டவையாக வலிமையானதாக உருவாக்கும் பொருட்டு, பொதுத்துறை வங்கிகளை ஒருங்கிணைக்கும் வசதியை ஏற்படுத்துவதே வங்கிகளின் இணைப்பிற்கான நோக்கமாகும். விஜயா வங்கி மற்றும் தேனாவங்கிகளை பரோடா வங்கியுடன் 01.04.2019அன்று இணைக்கப்பட்டது. பரோடா வங்கியிடமிருந்து பெறப்பட்ட உள்ளீடுகளின்படி, 31.03.2019 அன்று , இணைக்கப்பட்ட வங்கிகளின் மொத்த கிளைகளின் எண்ணிக்கை, அதாவது முன்பு விஜயா வங்கி, தேனா வங்கி என்றழைக்கப்பட்ட தற்போதைய பரோடாவங்கிக் கிளைகள் 9447 இல் இருந்து, 29.02.2020இன் படி, 9481  ஒருங்கிணைக்கப்பட்ட நிறுவனக் கிளைகளாக உயர்ந்துள்ளன. இந்தக் காலகட்டத்தில் ஊரக கிளைகளும்  2930 இல் இருந்து, 2934 ஆக உயர்ந்துள்ளன. 

31.03.2019 அன்று, முந்தைய விஜயாவங்கி,தேனா வங்கி அதாவது தற்போதையபரோடா வங்கிக்கிளைகளின் நிலவரம் மற்றும்ஒருங்கிணைக்கப்பட்ட நிறுவனக் கிளைகள் ஒப்பீட்டு நிலவரம் 28.02.2020 இன்படி இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஒருங்கிணைக்கப்பட்ட வங்கிகளின் கிராமப் புற வழித்தடம், ஒருங்கிணைப்பிற்குப்பின் அதிகரித்துள்ளதாகவும் ஊரக மக்கள்மற்றும் விவசாயிகளை அதிகம் சென்றடைந்துள்ளதாகவும், இவர்களிடையே வணிகஈடுபாடு  அதிகரித்துள்ளதாகவும் பரோடா வங்கி அறிவித்துள்ளது.கண்ணுக்குப் புலனாகும் வகையில் ஏற்பட்ட ஆதாயங்களாக, ஒன்றுக்கொன்று தொடர்புடைய முன்னுரிமைத் துறை  கடனளித்தல் 31.12.2019 இன் படி, 4253 கோடியிலிருந்து 2 லட்சத்து 23 ஆயிரத்து 128 கோடியாகவும், கிஸான் கடன் அட்டைகளின் இருப்பு, 07.03.2020 இன் படி ரூ.1796கோடியிலிருந்து, ரூ.38,325 கோடியாகவும் உயர்ந்துள்ளது. ஒருங்கிணைக்கப்பட்டதிலிருந்து 11 மாதங்களில் , விவசாய கடன்வழங்கல் ரூ.46,690 கோடியாக அதிகரித்துள்ளது. ஓவர் டிராஃப்ட் வசதி மூலம், கடன்பெறுவதற்கான அணுகல் ,பிரதமர்  ஜன் தன்யோஜனா திட்ட முன் பண கணக்குகளுக்கு  வழங்கப்பட்ட தொகை ரூ.11.38 கோடியாக அதிகரித்துள்ளது. இவ்வாறு மத்திய அமைச்சர்  கூறினார்.