புதுதில்லி,மார்ச்.27- கல்வி நிதியை ஒன்றிய அரசு வழங்காமல் இருப்பது நியாயமற்றது என நாடாளுமன்ற நிலைக்குழு கண்டித்துள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது.
'பிஎம் ஸ்ரீ' திட்டத்தை ஏற்காததால் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கான கல்வி நிதியை வழங்காமல் ஒன்றிய அரசு நிறுத்தியது நியாயமற்றது என நாடாளுமன்ற நிலைக்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிலுவைத் தொகையை விடுவிக்க வலியுறுத்தல்.
தமிழ்நாட்டுக்கு ரூ.2,152 கோடி, மேற்குவங்கத்திற்கு ரூ.1,000 கோடி, கேரளாவிற்கு ரூ.859 கோடி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.