india

img

விக்ஷித் பாரத் சிக்ஷா அதிக்ஷன் மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்!

உயர் கல்வி ஒழுங்குமுறை அமைப்புகளை ஒருங்கிணைக்கும் விக்ஷித் பாரத் சிக்ஷா அதிக்ஷன் மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், உயர் கல்வி ஒழுங்குமுறை அமைப்புகளான பல்கலைக்கழக மானியக் குழு (UGC), அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (AICTE), தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (NCTE) ஆகியவற்றை கலைத்துவிட்டு, ஒரே ஆணையாமாக கொண்டு வரும் விக்ஷித் பாரத் சிக்ஷா அதிக்ஷன் மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா, வரும் வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.