மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியின் இறுதி ஊர்வலம், செப்டம்பர் 14 சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் தில்லி ஏ.கே.ஜி. பவனிலிருந்து எய்ம்ஸ் மருத்துவமனை நோக்கி சென்றது. கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் தலைமையில் பல்லாயிரக்கணக்கானோர் கண்ணீர் மல்க அணிவகுத்து செங்கொடி நாயகனுக்கு பிரியாவிடை அளித்தனர். தலைவர்களும், குடும்பத்தினரும் இறுதி அஞ்சலி செலுத்திய பின், சீத்தாராம் யெச்சூரியின் உடல் மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது.