புதுதில்லி, ஏப்.30- முழுமையான விவாதங்களுக்குப் பிறகே, சட்டமன்றங்கள், நாடாளுமன் றங்களில் புதிய சட்டங்கள் உருவாக் கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா வலி யுறுத்தியுள்ளார். “ஒரு நல்லாட்சிக்கு சட்டம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின்படி நடப் பது முக்கியம்” என்றும் தலைமை நீதி பதி குறிப்பிட்டுள்ளார். உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி கள் மற்றும் மாநில முதல்வர்களின் 11-ஆவது கூட்டுமாநாடு, தில்லியி லுள்ள விஞ்ஞான் பவனில் சனிக்கிழமை யன்று நடைபெற்றது. கொரோனா உள்ளிட்ட காரணங்க ளால் தள்ளிப்போன இந்த மாநாடு 6 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு தற்போது நடைபெறும் நிலையில், இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். அவர் தனது துவக்க உரையின் போது, “நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிக்க வேண்டும்” என்றும் “இது நாட்டின் சாமானிய குடி மக்களுக்கு நீதித்துறை மீது நம்பிக்கை யை அதிகரிக்கும்” என்றும் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து உச்ச நீதி மன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: நீதித்துறை நிர்வாகத்தை பாதிக்கும் பிரச்சனைகளை கண்டுபிடித்து, அவற் றைக் களைவதுதான் இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம். நாடு முழுவதும் 4 கோடி வழக்கு களின் விசாரணை நீதிமன்றங்களில் நிலு வையில் உள்ளன. ஆனால், 10 லட்சம் பேருக்கு வெறும் 20 நீதிபதிகளே உள்ள னர்.
வழக்குகளை சமாளிக்க நீதிபதி கள் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. இன்றைய நிலவரப்படி, அனு மதிக்கப்பட்ட 1,104 உயர் நீதிமன்ற நீதி பதி பதவிகளில், 388 காலியிடங்கள் உள்ளன. கொலீஜியம் அளித்த 180 பரிந்துரைகளில், 126 நீதிபதிகள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு முன்பு, கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த மாநாடு நடைபெற்றபோது, நாட் டில் அனுமதிக்கப்பட்ட நீதித்துறை அதி காரிகளின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 811 ஆக இருந்தது, தற்போது அது 24 ஆயிரத்து 112 ஆக உள்ளது, இது 6 ஆண்டுகளில் 16 விழுக்காடு அதிகரித் துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யாக நான் பொறுப்பேற்றதிலிருந்தே, நீதிபதிகள் நியமனத்துக்கு முக்கியத்து வம் கொடுத்து வருகிறேன். தற்போதும் 50 நீதிபதிகளை உடனடியாக நியமிக்க வேண்டும் என விரும்புகிறேன். நிலத்தகராறு தொடர்பான வழக்கு கள் நீதிமன்றங்களுக்கு பெரும் சுமை யாக உள்ளன. இவற்றை நீதிமன்றங்கள் தாங்க முடியாது. நிலம் தொடர்பாக 66 சதவிகிதம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. காவல்துறை, பதிவுத்துறை என்று அரசின் ஒவ்வொரு துறையும் அதன் பணி யை சட்டப்படி செய்திருந்தால் பல வழக்குகள் நீதிமன்றத்துக்கு வர வேண்டியதே இருந்திருக்காது. நகராட்சிகள், கிராம பஞ்சாயத்துகள் முறையாக கடமையாற்றினால், போலீ சார் முறையாக விசாரணை செய்தால், சட்ட விரோத காவலில் சித்ரவதைக்கு முடிவு கட்டினால், மக்கள் நீதிமன்றத்தை நாட வேண்டிய அவசியம் இருக்காது. நீதிமன்றத்தின் தீர்ப்புகள் பல ஆண்டுகளாக அரசால் செயல்படுத்தப் படுவதில்லை. இதனால் வரும், நீதி மன்ற அவமதிப்பு மனுக்கள், புதிய வகைச் சுமையாக இருக்கின்றன.
அர சாங்கங்கள் வேண்டுமென்றே செயல் படாமல் இருப்பது ஜனநாயகத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அரசியலமைப்பு மூன்று உறுப்பு களுக்கு இடையே அதிகாரத்தைப் பிரிப்பதை வழங்குகிறது மற்றும் மூன்று உறுப்புகளுக்கு இடையிலான இணக்கமான செயல்பாடு ஜனநாய கத்தை வலுப்படுத்துகிறது. நமது கடமை யை நிறைவேற்றும் போது, லக்ஷ்மண் ரேகாவை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். கொள்கை வகுப்பதில் நீதி மன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றா லும், ஒரு குடிமகன் தன் புகாருடன் எங்க ளிடம் வந்தால், நீதிமன்றத்தால் அதை மறுக்க முடியாது. எனவே, ஆழமான விவாதம் மற்றும் விவாதத்தின் பின்னர் சம்பந்தப்பட்ட மக்களின் தேவைகள் மற்றும் அபிலா ஷைகளை உள்ளடக்கியே சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். அதிகாரிகள் அவ்வப்போது செயல்படாததும், சட்டமன்றங்களின் செயலற்ற தன்மையும் வழக்குகளுக்கு வழிவகுக்கின்றன. தற்போது நீதி மன்றங்களை அதிக அளவில் அணுகக் கூடியது அரசாங்கம் தொடர்புடைய வழக்குகளாகத்தான் உள்ளன. இவ்வாறு தலைமை நீதிபதி என்.வி. ரமணா தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.