மனித உரிமைகள் ஆர்வலரும், பத்திரிகையாளருமான கௌதம் நவ்லாகாவை மும்பை தலோஜா மத்திய சிறையிலிருந்து 48 மணி நேரத்திற்குள் வீட்டுக்காவலுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பீமா கோரேகான் வழக்கில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்கள், ஆர்வலர்கள் 16 பேரில் கௌதம் நவ்லாகாவும் ஒருவர். இவர் கடந்த 2018-ஆம் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட நிலையில், கடந்த 2022 ஏப்ரல் மாதத்தில் தலோஜா மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக கௌதம் நவ்லாகாவை மும்பை தலோஜா மத்திய சிறையிலிருந்து 48 மணி நேரத்திற்குள் வீட்டுக்காவலுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
வீட்டுக்காவலில் இருக்கும் போது, பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலரின் செலவுகளை ஈடுகட்ட ரூ.2.4 லட்சம் வைப்புத்தொகை செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.