சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உட்பட 7 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்படுவதாகக் குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உள்பட 7 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடனான கலந்துரையாடலுக்குப் பின்னர் 7 மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்றம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாகக் குடியரசுத் தலைவர் பிறப்பித்துள்ள உத்தரவில், பஞ்சாப் உயர்நீதிமன்ற நீதிபதி ராஜன்குப்தா பாடானாவுக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் கல்கத்தாவுக்கும், இமாச்சல் பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்வார் தாகூர் பஞ்சாபிற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி பஞந்தரி, ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் பிரகாஷ் சர்மா ஆகிய இருவரும் பாட்னா நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தெலுங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி அமர்நாத் கவுட் திரிபுரா நீதிமன்றத்திற்கும், அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சுபாஷ் சந்த் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.