ரியல்மீ நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ’ஜிடி நியோ 2 5ஜி’ ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் அறிமுகமாகியிருக்கிறது.
தொடர்ந்து தன்னுடைய 5ஜி தொழிநுட்பங்களைச் சந்தைக்குக் கொண்டு வரும் ரியல்மீ நிறுவனம் தன்னுடைய 'ஜிடி’ வரிசை ஸ்மார்ட்போன்களில் ஒன்றான ’ஜிடி நியோ 2 5ஜி’ ஸ்மார்ட்போனை சந்தைப்படுத்த இருக்கிறது.
இதுகுறித்து ரியல்மீ நிறுவனம் கூறுகையில், ரியல்மீ ஜிடி வரிசை ஸ்மார்ட்போன்கள் வேகமான சார்ஜ் வசதியும், விசி கூலிங், சிப்செட் எனத் தொழில்நுட்பத் திறனுடன் உருவாக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
’ரியல்மீ ஜிடி நியோ 2 5ஜி ’ ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 870 5ஜி வசதியும், அமொல்ட் திரை, 6ஜிபி, 8ஜிபி + கூடுதலாக 128 ஜிபியும், 256 ஜிபி மற்றும் 12 ஜிபி , 256 ஜிபி மெமரி கார்டு வசதியும், 5000 மெகாவாட்ஸ் அளவுள்ள பாட்டரி போன்ற சிறப்பம்சங்களைப் பெற்றுள்ளது.
இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.31,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் முதல் விற்பனை தொடங்கும் என்பதால் அமேசான் , பிளிப்கார்ட் விற்பனைத் தளங்களிலும் இதனைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.